Posts

Showing posts from September, 2020

17.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  .வெண்பா இலக்கணம் - 17. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  அனைவருக்கும் வணக்கம்  பஃறொடை வெண்பாவைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். நான்கு அடிகளில் எழுதுவது அளவியல் வெண்பா அல்லவா… வெண்பாவுக்கு உரிய அனைத்து இலக்கணங்களும் பொருந்தி வர #நான்கு_அடிகளுக்கு_மேல்_பன்னிரண்டு_அடிகள்_வரை கொண்ட வெண்பா #பஃறொடை_வெண்பா ஆகும். பஃறொடை வெண்பாவுக்கு அடி சிற்றெல்லை #ஐந்து_அடிகள். பேரெல்லை #பன்னிரண்டு_அடிகள் ஆகும். பல் + தொடை = பஃறொடை என்றானது. இங்கு தொடை என்பது #விகற்பத்தைக் குறிக்கும். விகற்பம் என்றால் #எதுகை என்பதை நீங்கள் அறிவீர்கள். பஃறொடை வெண்பாவை இரண்டு விதமாக எழுதலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம். #பஃறொடை_வெண்பா. - - - - - - - - - - - - - - - - - - - - - 01. ஒரு விகற்ப பஃறொடை வெண்பா மற்றும் 02. பல விகற்ப பஃறொடை வெண்பா ஆகும். அவற்றைத் தனித் தனியாகக் காண்போம். 01. ஒரு விகற்ப பஃறொடை வெண்பா இரண்டு வகைப் படும். அவை, 01. 01. ஒரு விகற்ப #நேரிசைப்_பஃறொடை வெண்பா மற்றும் 01. 02. ஒரு விகற்ப #இன்னிசைப்_பஃறொடை வெண்பா ஆகும். இந்த இரண்டு வகை வெண்பாக்களையும் எடுத்துக் காட்டு வெண்பாவுடன் பார்...

16.வெண்பா இலக்கணம்(அகன்)

Image
  .வெண்பா இலக்கணம் பாடம்  - 16. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 இருகுறள் நேரிசை வெண்பா தொடங்கி இதழகல் வெண்பா வரை 16 வகை வெண்பாக்களைப் பார்த்தோம். அடுத்ததாக காலில்லா வெண்பாவைப் பார்க்கலாம். ★17. காலில்லா வெண்பா. அஃதென்ன காலில்லா வெண்பா என்று தானே கேட்கிறீர்கள்…. கா, கொ, கோ, சா, சொ, சோ, தா, தொ, தோ, பா, பொ, போ, மா, மொ மோ போன்ற குறில், நெடில் எழுத்துகளில் வருகின்ற #துணைக்கால்எழுத்துஇல்லாமல் ( ா) எழுதும் வெண்பாக்களையே காலில்லா வெண்பா என்கிறோம். அந்த வகையில், 18 மெய்யெழுத்துகளிலும் உருவாகும் 54 எழுத்துகளை வெண்பாவில் தவிர்க்க வேண்டும். உ - ம்: - - - - - - கனியும் கனவில் கனிவினைத் தேக்கி இனிய முகத்தினை யேந்தி - வனிதை உனக்கென(து) அன்பினை ஒப்படைத் தேனே மனச்சுழி வீணே மதி. ……………- ''அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன். காலில்லா எழுத்துகளால் உருவான நேரிசை வெண்பா இது. அடுத்து, கொம்பில்லா வெண்பாவைப் பார்ப்போம். ★18. கொம்பில்லா வெண்பா. கெ, கே, கொ, கோ, கெள என 18 மெய்யெழுத்துகளாலும் ஆன 90 கொம்புள்ள எழுத்துகளை வெண்பாவில் தவிர்க்க வேண்டும். உ - ம்: - - - - - - - கனக்கும் மனத்தின் கதவைத் திறந்து ...

15.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம் பாடம்  - 15. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡   #இதழகல்_வெண்பாவைப் பார்ப்போமா…? ஆமாம்… இதழகல் வெண்பா என்றால் என்ன…? நாம் பேசும் போதும் ஒரு சில எழுத்துகளை உச்சரிக்கும் போதும் நம் உதடுகள் இரண்டும் ஒட்டும். உதாரணமாக அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ போன்ற உயிர் எழுத்துகளை உச்சரித்துப் பாருங்கள். உதடுகள் ஒட்டாது. உ, ஊ, ஒ, ஓ, ஒள போன்ற உயிர் எழுத்துகளை உச்சரிக்கும் போது உதடுகள் குவிந்து ஒன்றோடு ஒன்று ஒட்டும். அதே போல மெய்யெழுத்துகளில் க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ய், ர், ல், ழ், ள், ற், ன் என பதினைந்து எழுத்துகளை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டாது. ப், ம், வ் ஆகிய மூன்று எழுத்துகளை உச்சரிக்கும் போது உதடுகள் ஒட்டும். தமிழில் ஆய்த எழுத்து தவிர்த்து மொத்த எழுத்துகள் 246. இவற்றில் நாம் பயன்படுத்த உகந்த உயிரெழுத்துகள் ஏழு. மெய்யெழுத்துகள் பதினைந்து. இவை இரண்டும் புணர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகள் 7 X 15 = 105 எழுத்துகள் மட்டுமே. இங்கு, 105 மெய் எழுத்துகளையும் எழுதிக் காட்ட இயலாது. உதாரணத்திற்கு க், ச்  - இரண்டு எழுத்துகளை மட்டும் எழுதிக் காட்டுகிறேன்...

14.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
 வெண்பா இலக்கணம் பாடம்  - 14. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀   #அடியெதுகைஅல்லதுமுற்றெதுகைவெண்பாவைப்பார்ப்போம். இஃது அடிதோறும் உள்ள நான்கு சீர்களிலும் எதுகைப் பெற்று வரும் வெண்பா ஆகும். நான்கு சீர்களிலும் எதுகை என்பதால் #பொழிப்புமோனை பார்க்க வேண்டியதில்லை. எனினும், #பொழிப்புமோனையும்அமைந்தால்மிகச்_சிறப்பு. ★12. #அடியெதுகைஅல்லதுமுற்றெதுகை_வெண்பா. சித்தமெல்லாம் சத்தியத்தால் தித்திக்கத் தித்திக்கச் சித்திக்கும் புத்திளமை சித்திவரம் - எத்திசையும் நல்லவர்கள் இல்லையெனில் நல்லுணர்வும் கல்லறையில் சில்லறைக்குச் சொல்லெதற்குச் சொல். ………..............…- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன். முதல் இரண்டடிகளில் எட்டு சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக ‘த்’ வர அடியெதுகை ஆனது. பின் இரண்டடிகளில் ஏழு சீர்களிலும் இரண்டாவது எழுத்தாக ‘ல்’ வர அடியெதுகை ஆனது. இந்த இரு விகற்ப நேரிசை வெண்பாவில் பொழிப்பு மோனையும் வந்திருப்பதை கவனியுங்கள். ஒவ்வொரு அடியிலும் தனித் தனி அடியெதுகை வர பல விகற்ப வெண்பாவும் எழுதலாம். ★13. #வழியெதுகை_வெண்பா. வெண்பாவின் அனைத்து 15 சீர்களிலும் ஒரே எதுகை வரத் த...

13.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம் பாடம்  - 13. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀  இதுவரை பத்து வகை வெண்பாக்களைப் பார்த்துள்ளோம். அடுத்து நாம் காண இருப்பது #முடுகியல்_வெண்பா ஆகும். முடுகு என்றால் விரைவு என்று பொருள்.  எனில் முடுகியல் என்றால் என்ன….? சீர்கள் ஒரு #சீரான_சந்தத்துடன் விரைவு கொண்டு பாடப் படுவதே முடுகியல் வெண்பாவாகும். இந்த வகைப் பாடல் எழுத இசை அறிவு(சங்கீத ஞானம்) அவசியமாகிறது. திரையிசை பாடல்கள் எழுத, ‘#தத்தகாரம்’ என்றொரு சொல்லைப் பயன் படுத்துவர். இதை முழுதும் விளக்க வேண்டுமென்றால் தனியாக ஒரு நூல் எழுத வேண்டும். #தனதன #தந்தன என்றும் #தத்தனதத்தன, #தானன, #தான்னான, #தைய்யரதைய்யா என்று சீர், பொருள் இல்லாமல் பாடுவதைக் கேட்டிருக்கிறீர்கள் அல்லவா… இந்த இசைக்குத் தக்கபடி எழுத்துகள் அமைய எழுதுவதே #சந்தமுடுகுவெண்பாவாகும். ஆகவே, இங்கே என்னால் இயன்றவரை கொஞ்சம் எளிமையாகச் சொல்ல முயல்கிறேன். முடுகியல் வெண்பாவில் சந்தம் மட்டுமே பார்க்கப் படுவதால், வெண்டளை பார்ப்பதில்லை என்றொரு குறிப்பு காணப் படுகிறது. நாம் அவற்றைப் புறந் தள்ளுவோம். ஏனெனில், வெண்டளை பிறழ்ந்தால் அஃது எப்...

12.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம் பாடம் - 12. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀  கலம்பக வெண்பா, சமநடை வெண்பா, சமநிலை வெண்பா, மயூர வெண்பா போன்றே எழுத்துகள் எண்ணிக்கைப் பார்த்து எழுதும் இன்னொரு வகை வெண்பா கட்டளை வெண்பாவாகும். அளவியல் வெண்பாவின் முதல் மூன்று அடிகளில் ஒற்று நீக்கி எழுத்து எண்ணிக்கை ஒன்றி வருவது கட்டளை வெண்பாவாகும். பொதுவாக, முதல் மூன்று அடிகளில் ஒற்றெழுத்து நீக்கி 12 அல்லது 13 அல்லது 14 எழுத்துகள் வரும்படி பாடுதல் மரபு. 15 அல்லது 16 எழுத்துகள் வரும்படியும் எழுதலாம். அனைத்துச் சீர்களும் புளிமாச் சீராக அல்லது கூவிளம் சீராக இருந்தால் 12 எழுத்துகளும், கூவிளங்காய்ச் சீர்களாக இருந்தால் 16 எழுத்துகளும் வரும். மாச் சீர்களையும், விளஞ் சீர்களையும், காய்ச் சீர்களையும் கலந்து எழுதினால் 12 எழுத்துகளிலிருந்து 16 எழுத்துகள் வரை எழுத்து எண்ணிக்கை ஒன்றி வர எழுதலாம். ஈற்றடி சிந்தடி ஆதலால் எழுத்து எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. கட்டளை வெண்பாக்களை பலவகைகளிலும் எழுதலாம். அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். 10. 01. கட்டளை வெண்பா. இந்த வெண்பாவில் முதல் மூன்று அடிகளில் ஒற...

11.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம் பாடம்  - 11. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀   அளவியல் வெண்பாக்களின் உள்வகைகளான  01. இரு குறள் நேரிசை வெண்பா, 02. ஆசிடை இட்ட நேரிசை வெண்பா, 03. ஒற்றெழுத்தில்லா வெண்பா, 04. குளக வெண்பா மற்றும்  05. கலம்பக வெண்பா என்னும் ஐந்து வகைகளைப் பார்த்தோம். இனி, சமநடை வெண்பா என்றால் என்னவென்று பார்ப்போம். 06. #சமநடை_வெண்பா. பொதுவாக, வெண்பாக்களில் எழுத்தெண்ணிக்கையைக் கணக்கிடும் போது #ஒற்றெழுத்துநீக்கித்தான்_கணக்கிடுவார்கள். ஆனால், சமநடை வெண்பாவின் முதல் மூன்று அடிகளிலும் #ஒற்றெழுத்துஉட்படஎழுத்துகளின்எண்ணிக்கைசமமாகஅமைந்தால்அதுசமநடைவெண்பா_ஆகும். இந்த நேரிசை வெண்பாவைப் பாருங்கள். உ - ம்: - - - - - - - - ......- இரு விகற்ப நேரிசை வெண்பா - கார்முகிழ்ந் தோடநற் காலைப் புலர்ந்தது(ம்)  ஊர்ச்செழிக் கும்படி ஊற்றுது - நேர்வரும்  மாதங்கள் வேளாண்மை மங்கா தொளிர்ந்திடக்  கோதகற் றாதோ குளம். ….....................- ‘‘அகன்’’ @ அனுராதா கட்டபொம்மன். இந்த நேரிசை வெண்பாவில் #ஈற்றடிதவிரஅனைத்து_அடிகளிலும்  #ஒற்றோடு19எழுத்துகளும், #ஒற்று...

10.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  வெண்பா இலக்கணம் பாடம்  - 10. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  இரு குறள் நேரிசை வெண்பா மற்றும் ஆசிடை இட்ட நேரிசை வெண்பா பற்றி பார்த்தோம். இனி, ஒற்றில்லா வெண்பாவைப் பார்ப்போம். 03. #ஒற்றெழுத்தில்லா_வெண்பா. வெண்பாவுக்குரிய வெண்டளை பயின்று வரும். பதினைந்து சீர்களிலும் ஒற்றெழுத்து - மெய்யெழுத்து - வராமல் எழுத வேண்டும். சீர்களைத் தனித் தனியாகப் பிரிக்கும் போது மெய்யெழுத்து இருந்தாலும் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டு சீர்கள் இணையும் போது மெய்யெழுத்து மறைந்து காணப் படும். சற்று சிரமமானதாக இருந்தாலும் தமிழில் அதிக அளவு சொற்கள் தெரிந்து வைத்திருந்தால் ஒற்றில்லா வெண்பா எளிதாக எழுதி விடலாம். கீழே ஓர் ஒற்றில்லா நேரிசை வெண்பா கொடுத்துள்ளேன். பாருங்கள். உ - ம்: - - - - - - - இமவா னருளி னினியே திருளே நமதா யமையா நலிவு - உமையா ளிருகை வரமு மினிதா யிணைய வருவ தகில வழி. ஈற்றுச் சீரைத் தவிர மற்ற அனைத்து பதினான்கு சீர்களும் புளிமாச் சீர். ஈற்றுச் சீர் மலர் வாய்பாடில் அமைந்துள்ளது. ஒரு புரிதலுக்காக கீழே வெண்பாவைப் பிரித்து எழுதி காட்டி இருக்கிறேன். இமவா(ன்) அருளி(ன்) இனிய...

9.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  .வெண்பா இலக்கணம் பாடம்  - 09. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  நேரிசை வெண்பா மற்றும் இன்னிசை வெண்பா என்ற அளவியல் வெண்பாக்களின் இரண்டு வகைகளை பார்த்தோம். அவற்றில், நேரிசை வெண்பாவில் ஒரு விகற்பம் மற்றும் இருவிகற்பம் என்று இரண்டு வகையைப் பார்த்தோம். இன்னிசை வெண்பாவில் ஒரு விகற்பம், இரு விகற்பம் மற்றும் பலவிகற்பம் என மூன்று வகையைப் பார்த்தோம். இந்த இரண்டு வகையிலும் பலவகை பிரிவுகள் உண்டு. அவை, ★01. இரு குறள் நேரிசை வெண்பா. ★02. ஆசிடை இட்ட நேரிசை வெண்பா. ★03. ஒற்றெழுத்தில்லா வெண்பா. ★04. குளக வெண்பா. ★05. கலம்பக வெண்பா. ★06. சமநடை வெண்பா. ★07. சமநிலை வெண்பா. ★08. மயூரவியல் வெண்பா. ★09. சீர் நெடில் தொடங்கும் வெண்பா. ★10. கட்டளை வெண்பா. ★11. முடுகியல் வெண்பா. ★12. முற்றெதுகை வெண்பா. ★13. வழியெதுகை வெண்பா. ★14. வல்லெழுத்து வெண்பா. ★15. சிலேடை வெண்பா. ★16. இதழகல் வெண்பா. ★17. காலில்லா வெண்பா. ★18. கொம்பில்லா வெண்பா. என இன்னும் பலவகை உண்டு. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். 01. #இருகுறள்நேரிசை_வெண்பா. அ. ஒரே கருப் பொருள் கொண்ட இரண்டு குறள் வெண்பாக்களைத் தனித்...

8.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
  .வெண்பா இலக்கணம்  - 08. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀  உங்களால் எளிதாகக் #குறள்வெண்பா, #சிந்தியல்வெண்பாமற்றும் அளவியல் வெண்பாவில் #நேரிசைவெண்பா என மூன்றும் எழுத இயலும். அடுத்து, #இன்னிசை_வெண்பாவைப் பற்றி இன்றைய பாடத்தில் பார்க்கலாம். 02. இன்னிசை_வெண்பா. - - - - - - - - - - - - - - - - - - - - - - -  நேரிசை வெண்பாவுக்குரிய அனைத்து இலக்கணங்களும் #இன்னிசை_வெண்பாவுக்கும் பொருந்தும். நான்கு அடிகளால் ஆனது. முதல் மூன்று அடிகள் நான்கு அசைகள் உள்ள அளவடிகளாகவும், நான்காம் அடி மூன்று அசைகள் உள்ள சிந்தடியாகவும் அமையும். இரண்டாவது அடியின் நான்காம் சீர் தனிச் சீராகி முதல் இரண்டடிகளின் முதற் சீர்களுக்கு எதுகை பெற்று வருவது #நேரிசை_வெண்பா என்று கண்டோம். #இன்னிசைவெண்பாவில்தனிச்சீர்வராது… #வராது… #வராது… #முதல்இரண்டடிகளின்முதற்சீர்களுக்குஇரண்டாம்அடியின்நான்காம்சீர்எதுகைபெற்றும்வராது. அவசியமும் இல்லை. #இரண்டாம்அடியின்நான்காம்சீரைக்கோடிட்டு ( -- ) #பிரித்துக்காட்டவும்வேண்டாம். நான்கு அடிகளின் முதல் சீர்கள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பெற்று அமையின் அஃது ஒரு விகற்ப இன்னிசை வெண்பா...

7.வெண்பா இலக்கணம்(அகன் )

Image
.வெண்பா இலக்கணம் - 07. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  இதுவரை வெண்பா எழுதுவதற்கான இலக்கணத்தையும், குறள் வெண்பா மற்றும் சிந்தியல் வெண்பாக்களையும் அவற்றின் வகைகளையும் பார்த்தோம். இனி, #அளவியல்_வெண்பா பற்றியும் அவற்றின் வகைகளைப் பற்றியும் பார்க்கலாம். அளவியல் வெண்பா இரண்டு வகைப் படும். அவை, 01. நேரிசை வெண்பா மற்றும் 02. இன்னிசை வெண்பா ஆகும். 01. நேரிசை வெண்பா. - - - - - - - - - - - - - - - - - - - - நான்கு அடிகளால் ஆனது. முதல் மூன்று அடிகள் நான்கு அசைகள் உள்ள அளவடிகளாகவும், நான்காம் அடி மூன்று அசைகள் உள்ள சிந்தடியாகவும் அமையும். இரண்டாவது அடியின் நான்காம் சீர் தனிச் சீராகி முதல் இரண்டடிகளின் முதற் சீர்களுக்கு எதுகை பெற்று வர வேண்டும். நான்கு அடிகளின் முதல் சீர்கள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பெற்று அமையின் அஃது ஒரு விகற்ப நேரிசை வெண்பா எனப் படும். முதல் இரண்டடிகள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) பின்னிரண்டு அடிகள் ஓரெதுகை(ஒரு விகற்பம்) எனப் பெற்று அமையின் அஃது இரு விகற்ப நேரிசை வெண்பா எனப் படும். இந்த இரண்டு வகை வெண்பாக்களிலும் மூவகை செப்பலோசைகளும் வரும். #பலவிகற்பநேரிசைவெண்பாஎன்றுஒன்றுகிடையா...

6.வெண்பா இலக்கணம் (அகன் )

Image
  வெண்பா இலக்கணம்  - 06 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀  எழுத்து, #அசை, #சீர், #தளை, #தொடை போன்றவறை முந்தைய பாடங்களில் பார்த்தோம். அத்தோடு, ஒரு குறள் வெண்பா எழுதுவதற்கான அனைத்து விதிமுறைகளையும் பார்த்தோம். அடுத்து, பாடத்துக்குள் போகும் முன் #வெண்பாவுக்கான_ஓசை என்னவென்று தெரிந்து கொள்வோம். வெண்பாவிற்கான ஓசை #செப்பலோசை. #செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல் ஆகும். வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஒசையமைப்பு கொண்டதால் இது செப்பலோசை எனப் பட்டது. செப்பலோசை மூன்று வகைப் படும். அவை, 01.  #ஏந்திசைச்_செப்பலோசை. - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஏந்திசைச் செப்பலோசை எனப் படுவது #வெண்சீர்_வெண்டளைகள் (#காய்_முன்_நேர்) மட்டுமே வர புனையும் வெண்பா ஆகும். எடுத்துக் காட்டு. தேடாமல் வந்தவற்றின் தேவையறி யாதவர்கள் ஆடாமல் ஆடுகின்றார் பார். தேமாங்காய்  - கூவிளங்காய் - கூவிளங்காய் - கூவிளங்காய் தேமாங்காய் - கூவிளங்காய் - நாள். எல்லா சீர்களும் நேர் அசையில் தொடங்கி நேர் அசையில் முடிகின்றன. வெண்பாவில், ''ஏந்திசைச் செப்பலோசை'' வர வேண்டுமென்றால்,  ஆறு சீ...

5.வெண்பா இலக்கணம் (அகன்)

Image
  வெண்பா இலக்கணம்  - 05. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிதாக எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். நிற்க, வெண்பா என்று சொன்னாலே அது #அளவியல்_வெண்பாவைத் தான் குறிக்கும் என்பதால் கடந்த பாடத்தில் அளவியல் வெண்பாக்களை எடுத்துக் காட்டி பாடத்தை நிறைவு செய்திருந்தேன். இப்போது வெண்பாக்களில் #முதன்மையான #ஐந்துவகைவெண்பாக்களைப்_பார்க்கலாம். அவை, 01. #குறள்_வெண்பா. 02. #சிந்தியல்_ெண்பா. 03. #அளவியல்_வெண்பா. 04. #பஃறொடை_வெண்பா மற்றும் 05. #கலி_வெண்பா ஆகும். மேற்காணும் ஐந்து வகை வெண்பாக்களுக்குள்ளும் நிறைய உட்பிரிவுகளும் உண்டு. அவற்றில் எளிதானவற்றை எதிர் வரும் பாடங்களில் காணலாம். இஃதன்னியில் #சவலை_வெண்பா என்றொரு வகையும் உண்டு. இதைப் பற்றி கடைசியில் எழுதுகிறேன். #சவலைவெண்பாதற்காலத்தில்யாராலும்எழுதப்_படுவதில்லை. 01. குறள் வெண்பா. - - - - - - - - - - - - - - - - - - இரண்டு அடிகளால் ஆனது. முதலடி நான்கு சீர்களை உடைய அளவடியாகவும், இரண்டாம் அடி மூன்று சீர்களை உடைய சிந்தடியாகவும் அமைந்திருக்கும். #திருவள்ளுவநாயனார் எழுதிய ...

4.வெண்பா இலக்கணம் (அகன்)

Image
  வெண்பா இலக்கணம் -  04. 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡  #சொற்களும், #சீர்களும். - - - - - - - - - - - - - - - - - - - - - - - சொற்கள் என்றால் என்ன… - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - ஓரெழுத்துச் சொல் தொடங்கி அதிக பட்சமாக ஒற்றெழுத்தும் சேர்த்து ஆறு எழுத்துகள் வரை சொற்கள் கட்டமைக்கப் படும். இதனை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சொற்கள் கதை, கட்டுரை போன்றவற்றை எழுதப் பயன்படும். கூட்டுச் சொற்களை ஒரு சொல்லாக அலகிட முடியாது. சீர்கள் என்றால் என்ன… - - - - - - - - - - - - - - - - - - - - - - - சீர்களில் ஓரசைச் சீர் தொடங்கி மூவசைச் சீர்கள் வரை ஏற்கனவே விளக்கி இருக்கிறேன். நீ, பூ, நான், நாம், நலம், வலம், பழம், நிலம், முலாம், படார் போன்றவை ஒரு சொல் ஓரசைச் சீர்கள். நிலவு, கனவு, காதல், மேகம், புன்னகை, சில்லறை, வானம், தொடாதே, வராதே போன்றவை ஒரு சொல் ஈரசைச் சீர்கள். நீதான்(நீ + தான்), என்மகள்(என் + மகள்), பொன்மகள்(பொன் + மகள்) போன்றவை இரு சொற்கள் ஈரசைச் சீர்கள். கண்ணனவன்(கண்ணன் + அவன்), ஏருழவன்(ஏர் + உழவன்), பகல்பொழுது(பகல் + பொழுது) போன்றவை இரு சொல் மூவசைச் சீர்கள்....