Posts

நேரிசை வெண்பாக்கள் (மு.இரசியா பேகம்)

Image
  நேரிசை வெண்பா பாடல்கள்  கடவுள் வாழ்த்து ********************* சந்தச் சுவையுடன் சங்கத் தமிழையே/ தந்தாய் இறையே தரமாக-எந்நாளும்/ சிந்தும் தமிழைச் சுகந்த மழையாக/ அந்தம் வரைநீயே ஆக்கு!/  2.வான் சிறப்பு ***************** கருமுகில் மோகித்துக் கட்டியதோர் காதல்/ பெருமுகில் தாகம் பெருகும்-திருவாய்த்/ தெருவெல்லாம் வெள்ளம் திரளப் புரள/ வருகின்ற வான்மழையே வா/ 3.இயற்கை நேசிப்போம் ************************ நில்லாது தென்றல் நிசமாக நீவிவிட/ பொல்லாக் குயில்கூவிப் பாடுமே-பல்விதமாய்க்/ கல்லும் கடுமை கடந்திடச் சொல்லியே/ வெல்க விரும்பிய வாழ்வு./ 4.அன்பினால் ஆள்வாய் *************************** தன்னலம் இல்லாமல் தந்திட அன்பாகும்/ நன்னலமாய் நிற்கும் நிலைத்துலகில்-உன்னதமாய்ப்/ பின்பும் உயிர்ப்பில் பெருகும் பெருந்தனமே/ அன்பை புவனமாய் ஆக்கு./ 5.நட்பின் இலக்கணம் ************************* இணக்கம் அறிந்தால் இணங்கும் இதயம்/ பிணக்கா திருக்கப் பெறுக-குணத்தைக்/ கணக்கை அகற்றிக் கனிந்த இதயம்/ சுணக்கம் அகற்றச் சுகம்./ 6.மரங்கள் நடுவாய் ********************** மரங்கள் நடுவாய் மருகே தெருவில்/ உரமாம் இலைகள் உணர்ந...

தமிழன்னையே வாழ்க (நேரிசை வெண்பா)

Image
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~          #எங்கள்_தமிழன்னை_வாழ்க ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                         ( வெ ண் பா ) காலமகள் தந்த கவினே முழுமுதற் கோல மொழியே குளிர்தருவே - ஞாலம் முழுதும் ஒலிப்பவளே மூவாத் தமிழே அழகேநீ என்றென்றும் ஆள் .                                                                               ----#வங்கனூர்_அ_மோகனன் . நன்றி:- ஓவியர் #மணியம்_செல்வன் . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாய்மையைப் போற்றுவோம் (நேரிசை வெண்பாக்கள்)

 தாய்மையைப் போற்றுவோம் (நேரிசை வெண்பாக்கள்) 1. அன்னையவள் காட்டுகின்ற அன்பிற்கே ஈடில்லை/ கண்ணைப்போல் காப்பாள் கனிவுடனே - தன்னன்பில்/ ஓய்வறியா மாதரசி உண்மை ஒளிவிளக்காம் தாய்மையைப் போற்றுத் தணிந்து ./ - கவியழகன், திருவொற்றியூர். 2. அன்பை விதைத்தே அறிவை வளர்க்கின்ற/ அன்னையின் தொண்டு சிறப்பாகும் - என்றும்/ அவளைநீ நெஞ்சிலே அன்புருக வேண்ட/ கவலைகள் தீர்ந்திடும் காண்./ - நா.பாண்டியராஜா, இராசசிங்கமங்கலம். 3. அன்பினாலே உண்டான அன்னையவள் மட்டுந்தான்/ தன்னுயிரை நோக்காது தந்திடுவாள் - மன்னிப்பும்/ நல்கிடுவாள் பிள்ளைகள் நல்வழியில் வாழ்ந்திடவே/ பல்வகையில் நிற்பவளே தாய். - க. லட்சுமி ராம்பிரசாத், திருச்சிராப்பள்ளி. 4. தாயவளை நித்தம் தயவுடன் காத்திட / நேயமுடன் தந்திடுவாள் நேசத்தை - மாயங்கள் / செய்து மதிப்புறவும் செய்திடுவாள் எந்நாளும் / உய்யும் வழியிதுவே உன்னு / - மஞ்சுளா ரமேஷ் , காஞ்சிபுரம். 5. தினமும் அமுதாய்த் தருபவள் அன்னை/ மனமும் கலங்கா மகிழ்வாய் - தினமே/ அருளும் துணையாய் அணைத்திட வேண்டும்/ பெருமைகள் போற்றிடப் பேறு./ - நிறைமதி நீலமேகம், பெண்ணாடம். 6. அன்னையின் பார்வை அருள்மழை ஆனதே/ என்னயிது விந்...

அன்பினால் ஆள்வோம் (நேரிசை வெண்பாக்கள்)

அன்பினால் ஆள்வோம்  1.வன்மங்கள் விட்டோட வாழ்வே நலமாக / இன்பங்கள் வந்தாட இன்றேதான் - இன்னலின்றி / நன்னெஞ்சில் என்றென்றும் நட்புகள் கொண்டாட  / அன்பினால் ஆள்வோம் அரசு./ - கவிஞர்.தா. தமிழ் தங்கராஜ். 2. அன்பான நெஞ்சின் அழகு முகத்தினில்/ இன்னல் மறைந்திடுமாம் இவ்வுலகில் - என்றென்றும்/ மன்னுயிர் வாழ்ந்திட மாந்தர் மகிழ்ந்திட/ தன்னுயிராய்க் காண்ப தழகு./ - நிறைமதி நீலமேகம், பெண்ணாடம். 3. இணையாய்ப் புறாக்கள் இருப்பது போலத்/ துணையுடன் வாழ்வாய்த் துணிந்தே - அணையிலா/ வெள்ளமாய் அன்பது வேகமாய் ஓடிடக் / கொள்ளையாய் இன்பமே கொள்./ - செண்பக ஜெகதீசன். 4. அன்றிலாய் அன்பை அனுதினம் நல்கிய/ இன்பமாய் என்றும் இணைந்திடு - வன்மமின்றி/ வாழ்க்கை வழியிலே வாழ்வாய், வசந்தமும் வாழ்த்திடும் வந்துனை யே./ - சாத்தூர். கிருஷ்ணதாசன், கோவை. 5. விருப்புடன் செய்தல் விருந்தாகும் நன்மை / பெருகிடச் செய்யும் பெருமை - அருகில்/ அரும்பதம் ஆனதோர் அன்பினால் ஆள்வோம்/ பெரும்பத மான தருள்./ - சரஸ்வதி ராசேந்திரன். 6. உலகம் முழுதும் உலவும் மனிதா / கலகம் அகற்றிடக் கற்றே - பலத்துடன் / அன்பினால் ஆள்வோம் அகில உலகினில் / இன்பம் பெருகும் இயம்ப...

ஆசானை மதிப்போம் (நேரிசை வெண்பாக்கள்)

 ஆசானை மதிப்போம் - 1 1. ஆசானும் சொல்லும் அறவுரைக் கேட்டுநிதம் நாசங்கள் செய்யாத நற்குணத்தால் - தேசத்தில் பாசங்கள் பூத்திடவே பார்த்திருப்போம் தீஞ்செயலின் தோசங்கள் நீக்கச்செய்த் தொண்டு. - தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி. 2. ஆசானைப் போற்றி அறிவே துணையாக  பேசா திருந்து பெறுவாயே - கூசாது நேசமாய் நன்னெறி நேர்மையாய்ப்  பெற்றுமே  பாசமாய் கல்வியைக் காண். - பா. இந்திரன். 3. துன்பமிகு வாழ்க்கை துடைத்திடும் நோக்கிலே இன்பமிகு கல்விதரும் இன்முகனார் - என்றென்றும்  தன்னலம் பேணாத தெய்வத்தைத் தாள்பணிந்தே உன்னல் மதிக்கும் உலகு       - தமிழுறவன். 4. அகர எழுத்தை அழகுடன் ஓதி  சிகரம் தொடவே சிறப்புப் - பகர்ந்திட  குற்றம் களையும் குருவை மதித்திடு  சுற்றம் பெருகும் சுழன்று.                      - ந. முருகன். 5. எழுத்தறி வித்தவன் ஈசனுக் கீடாம் பழுதிலாக் கல்வியைப் பற்றி - விழுதென ஆசான வர்தம் அறிவுரை கேட்கநிதம்  பேசாத வாயில்லைப் பின்பு.  - மணி தியாகேஸ். 6. நெஞ்சின் பழுதகற்றி நேர்மைத் திறன்களெல்லாம்...

மலரே மௌனமா (நேரிசை வெண்பாக்கள்)

 மலரே மௌனமா: (நேரிசை வெண்பாக்கள்) 1. மலர்ந்தே யிருப்பினும் மாசிவன் பாதம் கலக்க முடியாமற் காய்ந்து - நிலத்தில் விழுந்து கிடந்திடும் வேதனை தன்னால் அழுந்தி வருந்தும் அறி. - செல்வராஜா சுதாகரன். 2. வலம்புரிச் சங்கே வலவன் மகளே மலர்வா யழகே மனத்தில் - இலகாய் இலகட மேறி இதய மலர்ந்தாய் அலத்தியே பேசாம லன்று. - தமிழுறவன். 3. மல்லிகைப் பூவும் மணமுமே வீசிடும் நல்லிதயம் காண நலமாக - நல்கிடும் மெல்லிய காற்றுந்தான் மேனியைத் தொட்டுமே சொல்லிச் சுவைக்குது சொல். - கலா கணேசன். 4. மலரே வருவாய் மனத்தைத் தொடுவாய் நிலவி னொளியில் நிழலாய் - உலவும் புலவர் வரியில் புதுமை படைப்பாய் மலரே மலர்வாய் மலர்ந்து. - ஜெ.வசந்தி, பளை. 5. செவ்விதழ் நீதிறந்து செப்பிடுவா யோர்வார்த்தைக் கொவ்வைப் பழவழகாய்க் கோமகள் -  அவ்விதம்    பவ்விய மானநடை பைங்கிளியே யென்மார்பில் திவ்விய மாயிருக்கத் தேன். - மணி தியாகேஸ். 6. எண்ணத்தில் எப்போதும் இன்பத்தைத் தந்திடுதே  மண்மேல் முகிழ்த்த மலரதுவும் - வண்டினத்தை  வண்ணம் பலகாட்டி வாவென் றழைத்துமே  பண்ணிசைக்க வைக்கிற தே. - மஞ்சுளா ரமேஷ். 7. மலர்வாய் திருவாய் மனத்தில் மகிழ்...

கவிகளில் பூப்போம் (நேரிசை வெண்பாக்கள்)

Image
           கவிகளில் பூப்போம்  (நேரிசை வெண்பாக்கள்) 1. விடுதலை தந்திடும் வீறுடைய மாந்தர் தொடுத்திடும் ஆய்தம்தாம் நம்மின் - அடுத்த கெடுதல் அழித்திட கொள்கையை ஏந்தி எடுக்க விரைந்து எழு. - புதுவைத் தமிழ்நெஞ்சன் 2. புதுப்பூ வெழில்தான் புனைவோம் கவிதான் மதுவினைக் கொண்ட மலர்தான் - புதுமுகம் நாங்கள் மரபில் நனிதமிழ்ப் பாட்டெழுதி பாங்காய்ப் படிக்கும் பதிவு. - தனராஜ் பாப்பணன், கோவை. 3. சிந்தையில் தோன்றும் சிறந்தக் கருத்துதனை  விந்தை எனவே விளம்பு - கந்தையில்  உள்ளம் சிதைந்தே உலவும் மனத்திலே  கள்ளம் இருக்குமோ காண்.  - ந. முருகன். 4. கன்னித் தமிழைக் கவினுறக் கற்றிட  என்றும் புனைவோம் இனிமையாய் – கன்னலின்  இன்பம் கவிகளில் ஏற்றிடக் காவியம் மன்றினில் பூத்திடு மே. - மஞ்சுளா ரமேஷ். 5. புவியில் புலமை புகழாய்த் திகழ சிவிகையில் நாளும் சிறப்பாய் − கவியால் கவினுற இன்பம் கவிஞர் தழுவ கவிகளில் பூப்போம் களித்து. - தா. தமிழ் தங்கராஜ். 6. நேரத்தை வீணாக்கி நிம்மதியைத் தூரமாக்கி பாரஞ் சுமக்காதே பாடியும் - தாரணியில்  நற்றமிழ்ப் பாக்களை நன்றா யியற்றியே க...