எனது பார்வையில் ஹைக்கூ (கா.ந.கல்யாணசுந்தரம்)

எனது பார்வையில் ஹைக்கூ ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின் வள்ளுவர் கூறிய வாய்மொழிக்கு ஏற்ப காலம் மனிதனின் வாழ்நிலையை நிர்ணயம் செய்கிறது. காலத்தே வாய்ப்புகளை நழுவவிடாது ஏற்ப செயல்படவேண்டும்.. அதே போல இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதே மிக மிகக் கடினமான சூழல் மானுடத்துக்கு ஏற்பட்டுள்ளது. நேரம் கருதியே வாசிப்புத் தன்மையும் மாறி வருகிறது. குறுகிய நேரத்தில் வாசித்து ஆழ்ந்த சிந்தனையும் சிறப்பான செய்திகளையும் சுருங்கக் கூறுதல் இப்போதுள்ள ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உள்ளது. ஹைக்கூ என்பது வெறுமனே எழுதக்கூடிய மூன்று வரிகள் அல்ல. 5/7/5 என்ற மரபு ஹைக்கூக்களைத் துறந்து தமிழ் தற்போது மாறுபட்ட ஹைக்கூ வடிவத்தினை அரவணைத்துக் கொண்டுள்ளது. எளிய சொற்கள் மட்டுமே ஹைக்கூ ஆகாது. முதல் இரண்டு வரிகளில் ஒரு செய்தியை, நிகழ்வை, காட்சியை மிகைப்படுத்தல் கூறுதல் வேண்டும். அலங்காரச் சொற்கள் தவிர்த்தல் அவசியமாகிறது. நிகழ் காலத்தைக் கையிலெடுத்துக் கொண்டு மனதில் காட்சியை நிலைபெறச்செய்தல் கூடுதல் சிறப்பு. மூன்றாவது வரி மின்னலென அற்புதமான முதலிரண்டு வரிகளுக்கு தொடர்புட...