19.எளியமுறை தமிழ் இலக்கணம்

 

எளியமுறை இலக்கணம் - 19.

.🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 

இ னிய  வணக்கம்.


உரிச் சொல் குறிக்கும் குணங்களைப்(பண்புகளைப்) பின் வருமாறு வகைப் படுத்தலாம். அவை,


01. உயர்திணைப் பண்புகள் மற்றும்


02. அஃறிணைப் பண்புகள் ஆகும்.


01. #உயர்திணைப்_பண்புகள்.


உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் ஆசிரியர். அவை,


01. அறிவு,


02. அருள்,


03 ஆசை,


04. அச்சம்,


05. மானம்,


06. நிறைவு,


07. பொறை (பொறுமை),


08. ஓர்ப்பு (தெளிவு),


09. கடைப்பிடித்தல்,


10. மையல் (மயக்கம்),


11. நினைவு,


12. வெறுப்பு,


13. உவப்பு (மகிழ்வு),


14. இரக்கம்,


15. நாண்(நாணம்),


16. வெகுளி (கோபம்),


17. துணிவு,


18. அழுக்காறு (பொறாமை),


19. அன்பு,


20. எளிமை,


21. எய்த்தல் (சோர்வு),


22. துன்பம்,


23. இன்பம்,


24. இளமை,


25. மூப்பு,


26. இகல் (பகை),


27. வென்றி (வெற்றி),


28. பொச்சாப்பு (பொல்லாங்கு),


29. ஊக்கம்,


30. மறம்,


31. மதம் (வெறி) மற்றும்


32. மறவி (மறதி)


ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும்.


இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப் பட்டுள்ளன.


02. அஃறிணைப் பண்புகள்.


அஃறிணைப் பண்புகளை ஆறு வகையாகப் பிரிக்கலாம். அவை,


02. 01. வடிவங்கள்,


02. 02. நாற்றங்கள்,


02. 03. வண்ணங்கள்,


02. 04. சுவைகள்


02. 05. ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள் மற்றும்


02. 06. உயர்திணை அஃறிணை இரண்டுக்கும் பொதுவான பண்புகள் ஆகும்.


இலக்கண நூலான நன்னூல் அஃறிணைப் பண்புகளை பின்வருமாறு வகைப் படுத்துகின்றது.


02. 01. #வடிவங்கள்.


01. வட்டம்,


02. இருகோணம்,


03. முக்கோணம்,


04. சதுரம்,


05. செவ்வகம் முதலிய பலவகைகள்.


02. 02. #நாற்றங்கள்.


01. நறுநாற்றம் (நறுமணம்) மற்றும்


02. துர்நாற்றம் (கெட்ட மணம்)


02. 03. #வண்ணங்கள்.


01. வெண்மை (வெள்ளை),


02. செம்மை (சிவப்பு),


03. கருமை (கருப்பு),


04. பொன்மை (மஞ்சள்) மற்றும்


05. பசுமை (பச்சை)


02. 04. #சுவைகள்_ஆறு_வகை.


01. கைப்பு (கசப்பு),


02. புளிப்பு,


03. துவர்ப்பு,


04. உவர்ப்பு,


05. கார்ப்பு (காரம்) மற்றும்


06. இனிப்பு.


02. 05. #ஊறுகள்_அல்லது_தொடு_உணர்வுகள்_எட்டு_வகை.


01. வெம்மை (வெப்பம்),


02. தண்மை (குளிர்ச்சி),


03. மென்மை (மிருது),


04. வன்மை (கடினம்),


05. நொய்மை (நைதல்),


06. திண்மை (நிலை),


07. இழுமெனல் (வழவழப்பு),


08. சருச்சரை (சொரசொரப்பு).


02. 06. #இரண்டிற்கும்_பொதுவான_பண்புகள்.


உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும் என்கிறது நன்னூல். அவை,


01. தோன்றல்,


02. மறைதல்,


03. வளர்தல்,


04. சுருங்கல்,


05. நீங்கல்,


06. அடைதல்,


07. நடுங்கல்,


08. இசைத்தல் மற்றும்


09. ஈதல்.


இத்தோடு சொல்லதிகாரம் நிறைவு பெறுகிறது. அடுத்த பதிவில் பொருளதிகாரத்தைக் கொஞ்சம் சுருக்கமாகக் காண்போம்.


………............................…


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)