எது கவிதை - (மீராசாகிபு சமூன்)

 

எது கவிதை?


கதை

விதை

கவிதை


அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன்  ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப் பட்ட  எதுகை மோனை சார்ந்த  ஆடையின் ஓர் எழுத்து இலக்கியக் கலையின் கவிதை வடிவம்


நவீன உலகின் அனுபவங்கள் கவிஞனின் ஆழ்மனதிற்கு இழுத்துச் செல்லும் போது கவிதைகளின் வலியினைக் காண்டறிகிறான்


தீக்குச்சி உரசும் போது தீப்பற்றி எறிவதுபோல் ஒரு கவிஞனின் எழுது கோலும் அப்படித்தான்


கூறாத நாவும் ஆறாகப் பொங்கும் அஞ்சாக் கவிக்குயில்களின் சருகுகளின் சான்று 

கூறுவதும் என் கடனே ...


ஒவ்வொரு கணமும் நூறு திரைகளைத் கிழித்து விழ்ந்திடச் செய்கிறது போகும்படி விட்டு விட்டு வாழ்வின் முதலும் இறுதியுமாக காலடி எடுத்து பாதம் இல்லாமல் கடந்து செல்லும் போதும் சிறந்த படைப்புகள் கவிஞனை சுமந்து அடையாளம் காட்டி நிற்கிறது ..


என் பார்வை உலகின் கவிதை இதுதான் ஒரு பட்ட மரத்தின் வேரின் நுனியிலிருந்து சட்டென்று எந்த தாவரமும் கனிக்கு திரும்புவதில்லை அரும்பு மொட்டு மலர் பூ பிஞ்சு காய் கனியென பரிணாம வளர்ச்சியில் மீண்டும் விதையாகிறது இவ்வாறே ஒரு படைப்பின் தன்மையும் அதற்க்கான ஆடைகள் கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது ...


பௌர்ணமி நிலவின்

தோற்றத்தை 

நிர்வாணமாகக் காண்கிறேன் ...

இதோ என் கண்கள் 

வியப்படையவில்லை ..

மாறாக ரசித்துக் கொண்டுதான் 

இருக்கின்றேன் ..


 சந்தம் இயல்பான ஒலிக் குறியீடுகளை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தும்  துண்டாகவும் கவிதை உதவுகின்றது


அறிஞர்கள் சிலர் கவிதை பற்றி கூறுப்போது கலையின் தேடலின் முன் கல்வியறிவு வளர்வதாகவும் நம்புகின்றனர். எனினும், வேறுசிலர், கவிதைக்கு முன் எழுத்துப் பயிற்சி தேவையில்லை எனவும் எடுத்து உரைக்கின்றனர்.


கவிதை எல்லா மனிதர்களுக்காகவும் படைக்கப்படுகிறது ஆனால் அது சில மனிதர்களுக்கு புரிவதேயில்லை ஆய்வின் தொடக்கத்தில் முற்றுப் பெறாத உண்மையாகவும் திகழ்கிறது


பழைமையான எஞ்சிய காவியக் கவிதை மரபானது, கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோற்றப் பெற்று பண்டைய சீனக் கவிதைகள்

நாட்டுப்புற பாடல்கள் வடிவங்களிலும் கவிதை வளர தொடங்கியது. 


இதன் போக்கு காலச் சூழ்ச்சியில் வேகமாக அலப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒலி அமைப்புகளிலும் ஒளி வடிவிலும் திரைப்படப் பாடல் வரிகளாகவும் காலத்திற்கும் இன்றுவரை நிலைத்திருக்கிறது ...


இவைகள் செவி ஓசை வழியாக  சந்தம் ஓசை வரிகளுடன் அக்கால தொடக்க முதல் எக்காலத்திற்கும் பேசுகிறது ..


உதாரணமாக ..


தன் ஊரின் ஆழத்தைப் பற்றி 

அருட்கவி கவிஞர் யுவன்


இப்படிச் சொல்கிறார் ...


காரிருள் இரியுஞ் சோதி

காரிக்கு முன்பே ஏகி

ஏரிநீரிறைத்துச் செந்நெல்

ஏற்றிடும் உழவர் நாடு ..


சேரிதான் அதுவே தேசச்

#சீவன் என்று ரைத்த  காந்தி

பூரிக்கக் குடிசை தோறும்

புரிதொழில் புரியும் நாடு ...


மூவின மக்கள்  வாழ்ந்தும்

முரணுறு பேதமில்லை

ஆவினம் மேயும் பச்சை

அழகுறு நிலங்கள் எல்லாம் ...


தாவியே வளருங் தெங்கு

தங்கரம் அலைக்கத் தென்றல்

பூவினைக் கொஞ்சி ஆடும்

#பொத்துவில் எங்கள் ஊரே !/


வரலாற்று சுவடுகளில் தடம் பதித்திருக்கும் புலமைக் கவிஞர்களெலாம் வழிகாட்டி விட்டுச் சென்ற இடத்திலிருந்து விலகாமல்

தன்னை அலங்கரித்து காட்ட ஆடை அலங்காரம் எவ்வளவு தூரம் அவசியமோ இவ்வாறே கவிஞர்கள் தாங்கள் படைப்பிலும்  புதுப் புதுச் சொற்களின் ஆதிக்கத்தை தடம் பதிக்க வேண்டும் 


பூமியின் மீது பொன்னுலகம் தேடும்

ஒரு கவிஞனாக மனித குலம் சோகப்படும்போது  தாகப் படும்போதும் தண்ணீரைக் கொடுப்பதாக

எந்தக் காலத்திற்கும் புல்வெளியில் நடந்து பூப்பறிப்பதுபோல்

மனிதனின் வாழ்வில் பனித்துளியாக

பல்வேறு பரிணாமங்களில் படம் பிடித்துக்காட்டும் காலத்தின் அளவீடாகக் தமிழ் இலக்கியங்களில் கவிதைகள்  திகழ்வேண்டும்


கவிஞனின் வாழ்வியலில் இணைந்து பறக்கும் சிறகுகளாய் கவிதையும் காலத்திற்கு காலம் அதன் ஆயுளை அளவீடு செய்யும் நூல்கள் யாவும் வரலாற்றை நிரூபிக்ககும் வாழ்வின் அத்தியாயமாக அமையவேண்டும் 

அந்த வரலாற்றில் தடம் பதித்து நிரந்தரமாக சமூகத்தின் கருவியாகத் திகழ வேண்டும் என்றும் சிறந்த படைப்புகளாக கவிதைகள் வளர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்


நல்வாழ்த்துகளுடன்...


பொத்துவில்

மீராசாகிபு சமூன்

Comments