எனது பார்வையில் ஹைக்கூ (ரசி குணா)
எனது பார்வையில் ஹைக்கூ (ரசி குணா)
✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍✍
ஹைக்கூ மூன்று வரியில்
விதிகளுக்குட்பட ஒரு காட்சியைச்
சொல்லி முடிப்பது அவ்வளவு
எளிதல்ல இருந்தும் மெல்ல மெல்ல சூட்சுமம் அறிந்தபின்னர் இன்பக் கடலுக்குள்
இறங்கிக் கொண்டே போகலாம்
இருந்தும் ஹைக்கூ ஆழம்
காணமுடியாத அற்புதமாகும்!
காலந்தோறும் கற்றுக் கொண்டே
இருக்கலாம் போலவே தோன்றும்.
ஹைக்கூவில் மூன்று வரிகளின்
சாராம்சம் இவைகள் தான்
-------- கரு
------------ கோணம்
------ பொருள்
(கரு)
முதலாவது கரு, ஹைக்கூவில்
மிகவும் முக்கியமான ஒன்று கருதான்
ஆகவே நல்லதொரு கருவில்
எழுதப்படும் ஹைக்கூகள் மட்டுமே
காலம் கடந்தும் பேசப்படும். நாம் இறந்து விட்டால் கூட அக் ஹைக்கூகள்
காலத்தை வென்று வலம் வரும்.
சிறிய சிறிய காட்சிகளைக் கொண்டு ஹைக்கூ எழுதினாலும்
அதை சிறப்பாக எழுத
முயற்சி செய்யலாம்
சிறு வெட்டுக்கிளியைக் கூட
சிறப்பித்துப் பாடலாம்
இயற்கையை ரசியுங்கள்
பழுத்து விழும் ஒரு இலையின்
அவலத்தைக்கூட நம்மால்
உணர்ந்து கொள்ள முடியும்!
அவரவர் உணர்வே ஹைக்கூவாகும் ஹைக்கூவின்
வெற்றிக்கு பொறுமையின்
பங்களிப்பு அவசியமாகிறது.
ஒரு காட்சியை மனதில்
நிறுத்திவிட்டு அதைப் பொறுமையுடன் ஹைக்கூவாக
மாற்றுங்கள் மூன்று வரிகளை
எழுதி முடித்துவிட்டோம் என்று
எண்ணாமல் எழுதிய வரிகளை
மீண்டும் மீண்டும் அழகு படுத்துங்கள். அற்புதம் நிகழும்,
(கோணம்)
கோணம் என்பது அதைவிட
அவசியமான முக்கியமாகும்
இங்குதான் வாசகர்களைத்
திசை திருப்தி பல்வேறு
கோணங்களில் சிந்திக்கத்
தூண்டுகிறது இது நடுவரியில்
அமைந்தாலும் முன்பின் வரும்
வரிகளை இதுவே தீர்மானித்துக்
கொள்கிறது
ஆனால் வளர்ந்து வரும்
கவிஞர்களின் ஹைக்கூகளில்
பார்த்தால் நடுவரி முடிவில்
அதிகமாக" வருகிறது" போகிறது
தெரிகிறது"இருக்கிறது"
இப்படியே அதிகம் வருகிறது
காரணம் ஹைக்கூ நிகழ் காலத்தில் அமையவேண்டும் என்பதால் தான்
ஆனால் அந்தச் சொற்கள் அவசியம்
என்றால் அங்கு நிச்சயம்
பயன்படுத்தியே ஆகவேண்டும்
தேவையில்லா இடத்தில் நிச்சயம்
தவிர்த்துக் கொள்ளவேண்டும்
இயற்கையை ரசித்தால்
காட்சிக்குப் பஞ்சமேது புதிது
புதிதாக எண்ணங்கள்
தோன்றும் யாராலும் தந்திருக்க
முடியாத காட்சிகளைக் கண் முன்
நிறுத்தி மனம் மகிழ்வடையலாம்.
(பொருள்)
ஹைக்கூவில் இறுதியில்
வருவதுதான் பொருள்"
கோணத்தில் அதாவது நடுவரியில் போடப்பட்ட புதிர்கள்
அனைத்திற்கும் விடைதருமிடம்
அழகிய பொருள் தரும் இந்த
மூன்றாவது வரி (கோணம்)
இது இரண்டாவது வரியுடன்
நெருங்கிய தொடர்பில் இருக்கும்
ஆனால் இரண்டாவது வரி
முதலாவது வரியுடன்
ஏதோவொரு தொடர்பு இருக்கும்.
இங்குதான் அதிகமான
கவிஞர்கள் தடுமாறி வருகிறார்கள் இறுதியில்
வரும் திருப்பம் என்பதை
அக் காட்சிக்குப் பொருந்தாது
எழுதுகிறார்கள் இறுதியில்
ஏமாற்றம் தருகிறார்கள்
நடுவரியில் திசை திருப்பி
இறுதி வரியில் வாசகனை
ஏமாற்றாமல் உண்மையை
உரைப்பதே பொருளாகும்.!
-----------------------------------------
நன்றியுடன் ரசி குணா

Comments
Post a Comment