Posts

Showing posts from November, 2020

நேரிசை வெண்பாக்கள் (மு.இரசியா பேகம்)

Image
  நேரிசை வெண்பா பாடல்கள்  கடவுள் வாழ்த்து ********************* சந்தச் சுவையுடன் சங்கத் தமிழையே/ தந்தாய் இறையே தரமாக-எந்நாளும்/ சிந்தும் தமிழைச் சுகந்த மழையாக/ அந்தம் வரைநீயே ஆக்கு!/  2.வான் சிறப்பு ***************** கருமுகில் மோகித்துக் கட்டியதோர் காதல்/ பெருமுகில் தாகம் பெருகும்-திருவாய்த்/ தெருவெல்லாம் வெள்ளம் திரளப் புரள/ வருகின்ற வான்மழையே வா/ 3.இயற்கை நேசிப்போம் ************************ நில்லாது தென்றல் நிசமாக நீவிவிட/ பொல்லாக் குயில்கூவிப் பாடுமே-பல்விதமாய்க்/ கல்லும் கடுமை கடந்திடச் சொல்லியே/ வெல்க விரும்பிய வாழ்வு./ 4.அன்பினால் ஆள்வாய் *************************** தன்னலம் இல்லாமல் தந்திட அன்பாகும்/ நன்னலமாய் நிற்கும் நிலைத்துலகில்-உன்னதமாய்ப்/ பின்பும் உயிர்ப்பில் பெருகும் பெருந்தனமே/ அன்பை புவனமாய் ஆக்கு./ 5.நட்பின் இலக்கணம் ************************* இணக்கம் அறிந்தால் இணங்கும் இதயம்/ பிணக்கா திருக்கப் பெறுக-குணத்தைக்/ கணக்கை அகற்றிக் கனிந்த இதயம்/ சுணக்கம் அகற்றச் சுகம்./ 6.மரங்கள் நடுவாய் ********************** மரங்கள் நடுவாய் மருகே தெருவில்/ உரமாம் இலைகள் உணர்ந...

தமிழன்னையே வாழ்க (நேரிசை வெண்பா)

Image
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~          #எங்கள்_தமிழன்னை_வாழ்க ! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~                         ( வெ ண் பா ) காலமகள் தந்த கவினே முழுமுதற் கோல மொழியே குளிர்தருவே - ஞாலம் முழுதும் ஒலிப்பவளே மூவாத் தமிழே அழகேநீ என்றென்றும் ஆள் .                                                                               ----#வங்கனூர்_அ_மோகனன் . நன்றி:- ஓவியர் #மணியம்_செல்வன் . ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாய்மையைப் போற்றுவோம் (நேரிசை வெண்பாக்கள்)

 தாய்மையைப் போற்றுவோம் (நேரிசை வெண்பாக்கள்) 1. அன்னையவள் காட்டுகின்ற அன்பிற்கே ஈடில்லை/ கண்ணைப்போல் காப்பாள் கனிவுடனே - தன்னன்பில்/ ஓய்வறியா மாதரசி உண்மை ஒளிவிளக்காம் தாய்மையைப் போற்றுத் தணிந்து ./ - கவியழகன், திருவொற்றியூர். 2. அன்பை விதைத்தே அறிவை வளர்க்கின்ற/ அன்னையின் தொண்டு சிறப்பாகும் - என்றும்/ அவளைநீ நெஞ்சிலே அன்புருக வேண்ட/ கவலைகள் தீர்ந்திடும் காண்./ - நா.பாண்டியராஜா, இராசசிங்கமங்கலம். 3. அன்பினாலே உண்டான அன்னையவள் மட்டுந்தான்/ தன்னுயிரை நோக்காது தந்திடுவாள் - மன்னிப்பும்/ நல்கிடுவாள் பிள்ளைகள் நல்வழியில் வாழ்ந்திடவே/ பல்வகையில் நிற்பவளே தாய். - க. லட்சுமி ராம்பிரசாத், திருச்சிராப்பள்ளி. 4. தாயவளை நித்தம் தயவுடன் காத்திட / நேயமுடன் தந்திடுவாள் நேசத்தை - மாயங்கள் / செய்து மதிப்புறவும் செய்திடுவாள் எந்நாளும் / உய்யும் வழியிதுவே உன்னு / - மஞ்சுளா ரமேஷ் , காஞ்சிபுரம். 5. தினமும் அமுதாய்த் தருபவள் அன்னை/ மனமும் கலங்கா மகிழ்வாய் - தினமே/ அருளும் துணையாய் அணைத்திட வேண்டும்/ பெருமைகள் போற்றிடப் பேறு./ - நிறைமதி நீலமேகம், பெண்ணாடம். 6. அன்னையின் பார்வை அருள்மழை ஆனதே/ என்னயிது விந்...

அன்பினால் ஆள்வோம் (நேரிசை வெண்பாக்கள்)

அன்பினால் ஆள்வோம்  1.வன்மங்கள் விட்டோட வாழ்வே நலமாக / இன்பங்கள் வந்தாட இன்றேதான் - இன்னலின்றி / நன்னெஞ்சில் என்றென்றும் நட்புகள் கொண்டாட  / அன்பினால் ஆள்வோம் அரசு./ - கவிஞர்.தா. தமிழ் தங்கராஜ். 2. அன்பான நெஞ்சின் அழகு முகத்தினில்/ இன்னல் மறைந்திடுமாம் இவ்வுலகில் - என்றென்றும்/ மன்னுயிர் வாழ்ந்திட மாந்தர் மகிழ்ந்திட/ தன்னுயிராய்க் காண்ப தழகு./ - நிறைமதி நீலமேகம், பெண்ணாடம். 3. இணையாய்ப் புறாக்கள் இருப்பது போலத்/ துணையுடன் வாழ்வாய்த் துணிந்தே - அணையிலா/ வெள்ளமாய் அன்பது வேகமாய் ஓடிடக் / கொள்ளையாய் இன்பமே கொள்./ - செண்பக ஜெகதீசன். 4. அன்றிலாய் அன்பை அனுதினம் நல்கிய/ இன்பமாய் என்றும் இணைந்திடு - வன்மமின்றி/ வாழ்க்கை வழியிலே வாழ்வாய், வசந்தமும் வாழ்த்திடும் வந்துனை யே./ - சாத்தூர். கிருஷ்ணதாசன், கோவை. 5. விருப்புடன் செய்தல் விருந்தாகும் நன்மை / பெருகிடச் செய்யும் பெருமை - அருகில்/ அரும்பதம் ஆனதோர் அன்பினால் ஆள்வோம்/ பெரும்பத மான தருள்./ - சரஸ்வதி ராசேந்திரன். 6. உலகம் முழுதும் உலவும் மனிதா / கலகம் அகற்றிடக் கற்றே - பலத்துடன் / அன்பினால் ஆள்வோம் அகில உலகினில் / இன்பம் பெருகும் இயம்ப...

ஆசானை மதிப்போம் (நேரிசை வெண்பாக்கள்)

 ஆசானை மதிப்போம் - 1 1. ஆசானும் சொல்லும் அறவுரைக் கேட்டுநிதம் நாசங்கள் செய்யாத நற்குணத்தால் - தேசத்தில் பாசங்கள் பூத்திடவே பார்த்திருப்போம் தீஞ்செயலின் தோசங்கள் நீக்கச்செய்த் தொண்டு. - தங்கை பாலா ஆசினி, சேந்தன்குடி. 2. ஆசானைப் போற்றி அறிவே துணையாக  பேசா திருந்து பெறுவாயே - கூசாது நேசமாய் நன்னெறி நேர்மையாய்ப்  பெற்றுமே  பாசமாய் கல்வியைக் காண். - பா. இந்திரன். 3. துன்பமிகு வாழ்க்கை துடைத்திடும் நோக்கிலே இன்பமிகு கல்விதரும் இன்முகனார் - என்றென்றும்  தன்னலம் பேணாத தெய்வத்தைத் தாள்பணிந்தே உன்னல் மதிக்கும் உலகு       - தமிழுறவன். 4. அகர எழுத்தை அழகுடன் ஓதி  சிகரம் தொடவே சிறப்புப் - பகர்ந்திட  குற்றம் களையும் குருவை மதித்திடு  சுற்றம் பெருகும் சுழன்று.                      - ந. முருகன். 5. எழுத்தறி வித்தவன் ஈசனுக் கீடாம் பழுதிலாக் கல்வியைப் பற்றி - விழுதென ஆசான வர்தம் அறிவுரை கேட்கநிதம்  பேசாத வாயில்லைப் பின்பு.  - மணி தியாகேஸ். 6. நெஞ்சின் பழுதகற்றி நேர்மைத் திறன்களெல்லாம்...

மலரே மௌனமா (நேரிசை வெண்பாக்கள்)

 மலரே மௌனமா: (நேரிசை வெண்பாக்கள்) 1. மலர்ந்தே யிருப்பினும் மாசிவன் பாதம் கலக்க முடியாமற் காய்ந்து - நிலத்தில் விழுந்து கிடந்திடும் வேதனை தன்னால் அழுந்தி வருந்தும் அறி. - செல்வராஜா சுதாகரன். 2. வலம்புரிச் சங்கே வலவன் மகளே மலர்வா யழகே மனத்தில் - இலகாய் இலகட மேறி இதய மலர்ந்தாய் அலத்தியே பேசாம லன்று. - தமிழுறவன். 3. மல்லிகைப் பூவும் மணமுமே வீசிடும் நல்லிதயம் காண நலமாக - நல்கிடும் மெல்லிய காற்றுந்தான் மேனியைத் தொட்டுமே சொல்லிச் சுவைக்குது சொல். - கலா கணேசன். 4. மலரே வருவாய் மனத்தைத் தொடுவாய் நிலவி னொளியில் நிழலாய் - உலவும் புலவர் வரியில் புதுமை படைப்பாய் மலரே மலர்வாய் மலர்ந்து. - ஜெ.வசந்தி, பளை. 5. செவ்விதழ் நீதிறந்து செப்பிடுவா யோர்வார்த்தைக் கொவ்வைப் பழவழகாய்க் கோமகள் -  அவ்விதம்    பவ்விய மானநடை பைங்கிளியே யென்மார்பில் திவ்விய மாயிருக்கத் தேன். - மணி தியாகேஸ். 6. எண்ணத்தில் எப்போதும் இன்பத்தைத் தந்திடுதே  மண்மேல் முகிழ்த்த மலரதுவும் - வண்டினத்தை  வண்ணம் பலகாட்டி வாவென் றழைத்துமே  பண்ணிசைக்க வைக்கிற தே. - மஞ்சுளா ரமேஷ். 7. மலர்வாய் திருவாய் மனத்தில் மகிழ்...

கவிகளில் பூப்போம் (நேரிசை வெண்பாக்கள்)

Image
           கவிகளில் பூப்போம்  (நேரிசை வெண்பாக்கள்) 1. விடுதலை தந்திடும் வீறுடைய மாந்தர் தொடுத்திடும் ஆய்தம்தாம் நம்மின் - அடுத்த கெடுதல் அழித்திட கொள்கையை ஏந்தி எடுக்க விரைந்து எழு. - புதுவைத் தமிழ்நெஞ்சன் 2. புதுப்பூ வெழில்தான் புனைவோம் கவிதான் மதுவினைக் கொண்ட மலர்தான் - புதுமுகம் நாங்கள் மரபில் நனிதமிழ்ப் பாட்டெழுதி பாங்காய்ப் படிக்கும் பதிவு. - தனராஜ் பாப்பணன், கோவை. 3. சிந்தையில் தோன்றும் சிறந்தக் கருத்துதனை  விந்தை எனவே விளம்பு - கந்தையில்  உள்ளம் சிதைந்தே உலவும் மனத்திலே  கள்ளம் இருக்குமோ காண்.  - ந. முருகன். 4. கன்னித் தமிழைக் கவினுறக் கற்றிட  என்றும் புனைவோம் இனிமையாய் – கன்னலின்  இன்பம் கவிகளில் ஏற்றிடக் காவியம் மன்றினில் பூத்திடு மே. - மஞ்சுளா ரமேஷ். 5. புவியில் புலமை புகழாய்த் திகழ சிவிகையில் நாளும் சிறப்பாய் − கவியால் கவினுற இன்பம் கவிஞர் தழுவ கவிகளில் பூப்போம் களித்து. - தா. தமிழ் தங்கராஜ். 6. நேரத்தை வீணாக்கி நிம்மதியைத் தூரமாக்கி பாரஞ் சுமக்காதே பாடியும் - தாரணியில்  நற்றமிழ்ப் பாக்களை நன்றா யியற்றியே க...

வகையுளி என்றால் என்ன(அகன்)

Image
’வகையுளி’ என்றால் என்ன… ☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡☆♡ இலக்கியங்களில் பேசப் படும் இலக்கணச் சொற்களில் ஒன்று ‘வகையுளி’ ஆகும். அஃதென்ன ‘வகையுளி….?’ #வகையுளி என்றால் என்ன என்று இன்று பார்க்கலாம். அதற்கு முன் குறள் வெண்பாவுக்கும், குறள் வெண்பாவின் இனமான குறள் தாழிசை(குறட்டாழிசை)க்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் காண்போம். #ஒற்றுமை: குறள் வெண்பாவைப் போலவே முதல் அடி நான்கு சீர்களுடன் அளவடியாகவும் இரண்டாம் அடி மூன்று சீர்களாகச் சிந்தடியாகவும் பார்ப்பதற்கு குறள் வெண்பா போலவே இருக்கும். #வேற்றுமை: குறள் தாழிசை குறள் வெண்பாவைப் போலன்றி முதல் அடி நான்கு சீர்களுக்கு மேலும் நெடிலடி, கழிநெடிலடியாகவும் வரும். இரண்டாம் அடி முதலடியை விடவும் அளவில் குறைந்த சீர்களைப் பெற்று வரும். குறள் வெண்பாவில் வெண்டளை மட்டுமே பயின்று வரும். குறள் தாழிசையில் தளை குறள் வெண்பாவைப் போலன்றி வெண்டளைச் சிதைந்தும், கலித் தளை பெற்றும், செப்பலோசைச் சிதைந்தும் வரும். சுருக்கமாகச் சொல்வதெனில், #குறள்_வெண்பாவில்_கலித்தளை_கலந்து #செப்பலோசைச்_சிதைந்து_வருவது #குறள்_தாழிசை(குறட்டாழிசை) எனப் படும். ★ ★ ★ ★ ★ ★ ★ இனி கீழே படிப்போமா...? #வகை என்றா...

ஆண்டவனைத் தொழுவோம் (நேரிசை வெண்பாக்கள்)

Image
  ஆண்டவனைத் தொழுவோம் : (நேரிசை வெண்பாக்கள்) 1. அன்பே உலகத்தின் ஆண்டவன் என்பதை / அன்றே உரைத்தனர் ஆன்றோர்கள் - நன்றிதை / இன்றே உணர்வாய் இனிதாக வாழ்ந்திட / நன்றே நடந்திடும் நம்பு./ - முகிலை பாஸ்ரீ. 2. உயிரும் உறவும் உலகில் உயர்வு / பயிரும்  கதிரும்  உறவாம் -உயிராம் / இயற்கை சிறக்க இனிமேல் செழிக்க /  இயல்பாய்த் தொழுவாய் இறை./ - பொன்னம்பலவாணன். 3. மறையு மவலம் மலரு மருளும்/ குறையு மகன்று குருடும் - நிறைந்த/ பழுதும் பணியும் பகடும் பெருகும்/  வழுவா திறையை வழுத்து./ - த.கி.ஷர்மிதன். 4. இடர்கள் களைந்திங்(கு)  கினியவை மல்கத்/ தொடரும்  பிணியினித் தொல்லை - கடந்து/  தடங்கள் பதிக்கத் தரணி செழிக்க/ சுடரா லணைத்திடு தொற்று./     - மணி தியாகேஸ், இலங்கை. 5. முருகா  மருகா முழுமுதற் தேவா/ வருவாய் தருவாய் வளமும் -அருள்வாய்/ கருணை புரிவாய் கலியுக மைந்தா/ இருளைக் களைவாய் விரைந்து./ - காரைக்குடி கிருஷ்ணா. 6. அலைகடல்  மேலே அமர்ந்த இறையே/  கலைமகள் நீயே கருத்தாய் - கலையே/ விலையது பேசிடா வித்தையைக் கற்றேன்/  சிலையும்  வடித்து  சிற./...

3.எதுகை என்றால் என்ன (அகன்)

Image
எதுகை என்றால் என்ன? 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 பாடம் - 03. ॐॐॐॐॐॐ அனைவருக்கும் வணக்கம். இதுவரை சிறப்பான எதுகை என்பது எழுத்துக்கு எழுத்தென ஒரே எழுத்தை இயல்பாக கொண்ட எதுகை எதுவோ அதுவே எனக் கண்டோம். இனி, நிறைவாக, இதுவரை நாம் பார்த்த அத்தனை எதுகைகளையும் மூன்று பிரிவுகளுக்குள் அடக்கலாம். அவை, 01. தலையாகு எதுகை. 02. இடையாகு எதுகை மற்றும் 03. கடையாகு எதுகை ஆகும். 01. #தலையாகு_எதுகை. சீர்களின் இரண்டாம் எழுத்து மட்டுமின்றிச் சீர் முழுவதும் ஒன்றி வருவது தலையாகு எதுகை ஆகும். இது மிக மிகச் சிறப்பான எதுகை ஆகும். உ - ம்: #எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் #கண்ணென்ப வாழும் உயிர்க்கு. - குறள். 392. #விண்ணுக்_கழகாகும் வெண்ணிலவு வேந்தர்தம் #மண்ணுக்_கழகாகும் மாண்பு. - குறள் வெண்பா. மேற்கண்ட குறட்பாக்களில் இரண்டாம் எழுத்தாகிய 'ண்' என்பது மட்டுமின்றிச் சீரின் மற்ற எழுத்துகளும் ஒன்றி வந்துள்ளதைப் பாருங்கள். இரண்டாவது குறள் வெண்பாவில் முதல் சீர்கள் மட்டுமின்றி இரண்டாம் சீர்களும் ஒத்து வந்திருப்பது  இன்னும் பேரழகு அல்லவா. எனவே, இவை தலையாகு எதுகை ஆகும். கற்க - நிற்க, கண்ணுடையர் - புண்ணுடையர், நல்லார...

2.எதுகை என்றால் என்ன (அகன்)

Image
 எதுகை என்றால் என்ன? 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 பாடம் - 02. ॐॐॐॐॐॐ அனைவருக்கும் வணக்கம். முந்தைய பதிவில் 01. இயல்பு எதுகை, 02. வருக்க எதுகை. 03. இரண்டடி எதுகை, 04. இன எதுகை என நான்கு வகைகளைப் பார்த்தோம். இங்கு 05. ஆசிடை இட்ட எதுகையைப் பார்ப்போமா… 05. #ஆசிடை_இட்ட_எதுகை. ஆசு என்றால் பற்றுக் கோடு, குற்றம் என்று பொருள். நகை செய்யும் கொல்லர்கள் பொன், வெள்ளி நகைகளைப் பிணைக்கும் போது #இளக்கி(#Flux) என்னும் ஒரு பொருளை பயன் படுத்துவார்கள். அந்த #இளக்கி இல்லாமல் நகைகளைப் பிணைக்க முடியாது. பற்றவைப்புப் பட்டறைகளில்(Welding Shops) இரண்டு உலோகத் துண்டுகளை ஒட்ட வைக்க இதே போல இளக்கியை(Flux) பயன் படுத்துவதைப் பார்க்கலாம். #ஆசிடை_இட்ட_நேரிசை_வெண்பா என்பது நேரிசை வெண்பாவின் ஓர் உட்பிரிவு. அங்கே ஆசு என்பது பற்றாசு. உலோகத் துண்டுகளைப் பற்ற வைக்கப் பயன்படுத்தும் பொருள். அது போலச் சீர்களை இணைக்கும் ஒன்று அல்லது இரண்டு அசைகளைக் குறிக்கும். #ஆசிடை_இட்ட_நேரிசை_வெண்பாவையும், #ஆசிடை_இட்ட_எதுகையையும்_குழப்பிக்_கொள்ளக்_கூடாது. இங்கு, நாம் காணவிருக்கும் #ஆசு என்பது ய், ர், ல் ழ் எனும் இடையின மெய்யெழுத்துகள் நான்...