நேரிசை வெண்பாக்கள் (மு.இரசியா பேகம்)

 




நேரிசை வெண்பா பாடல்கள் 


கடவுள் வாழ்த்து

*********************

சந்தச் சுவையுடன் சங்கத் தமிழையே/

தந்தாய் இறையே தரமாக-எந்நாளும்/

சிந்தும் தமிழைச் சுகந்த மழையாக/

அந்தம் வரைநீயே ஆக்கு!/ 


2.வான் சிறப்பு

*****************

கருமுகில் மோகித்துக் கட்டியதோர் காதல்/

பெருமுகில் தாகம் பெருகும்-திருவாய்த்/

தெருவெல்லாம் வெள்ளம் திரளப் புரள/

வருகின்ற வான்மழையே வா/


3.இயற்கை நேசிப்போம்

************************

நில்லாது தென்றல் நிசமாக நீவிவிட/

பொல்லாக் குயில்கூவிப் பாடுமே-பல்விதமாய்க்/

கல்லும் கடுமை கடந்திடச் சொல்லியே/

வெல்க விரும்பிய வாழ்வு./


4.அன்பினால் ஆள்வாய்

***************************

தன்னலம் இல்லாமல் தந்திட அன்பாகும்/

நன்னலமாய் நிற்கும் நிலைத்துலகில்-உன்னதமாய்ப்/

பின்பும் உயிர்ப்பில் பெருகும் பெருந்தனமே/

அன்பை புவனமாய் ஆக்கு./


5.நட்பின் இலக்கணம்

*************************

இணக்கம் அறிந்தால் இணங்கும் இதயம்/

பிணக்கா திருக்கப் பெறுக-குணத்தைக்/

கணக்கை அகற்றிக் கனிந்த இதயம்/

சுணக்கம் அகற்றச் சுகம்./


6.மரங்கள் நடுவாய்

**********************

மரங்கள் நடுவாய் மருகே தெருவில்/

உரமாம் இலைகள் உணர்ந்து-மரமாய்/

வரமாகும் மண்ணில் வளிவெளி காற்றில்/

தரமாய் உயிர்வளி தந்து./


7.வெல்வாய் உலகை

***********************

வெல்வாய் உலகை விரைந்து முயன்றுநற் /

கல்வி கசடற கற்றபின்-வல்லவராய்ச்/

செல்லுமிட மெல்லாம் சிறப்பாகச் சேர்ந்திடுமே/

நல்லவர் நட்பினை நாடு!/

✍✍✍

ஆக்கம்

குயில் மு இரசியா பேகம்

Comments

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)