எது கவிதை (மகேஸ்வரி கிருஷ்ணசாமி)
எது கவிதை
கவிதை என்றால் என்ன ?
விதிகளைப் பின்பற்றி வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவிதை ஆகுமா.கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு. கவிதையின் முக்கிய பகுதி அதனுடைய சக்தி.அது ஒவ்வொரு கவிஞனின் உள்மனதின் உணர்ச்சியாகும்..
உண்மைக் கவிதைக்கு உரைகல் செவியாகும்.கம்பன் சொல்லுகிறார் *செவி நுகர் கவிகள்* என்று. கவிதையின் உயர்வைக் காதில் கேட்டுப் பார்க்க வேண்டும். ஒரு முழுமையான கவிஞன் தன் உள்ளத்தில் உள்ள உணர்வுகளை தன் மொழியினாலே தான் உணர்த்த முடியும்.
கவிதையில் சரியான வார்த்தைகள் சரியான இடத்தில் அமைய வேண்டும். அதோடு கொஞ்சம் கற்பனை வளம் தன் உணர்ச்சிகளின் வெளிப்பாடு எல்லாம் சேர்த்து வார்த்தைகளைக் கோர்க்கும் போது கவிதை அழகான முத்துச்சரமாகக் கேட்பதற்கு அமைகிறது.
ஒரு சாதாரண மனிதனுக்கு கண்ணீர்த்துளி என்பது ஒரு சொட்டு உப்பு நீர் போல் தான் தோன்றும்.அந்தக் கண்ணீரின் ரகசியத்தை அதன் சரித்திரத்தை அவன் அறிவானா..அது கவிஞனால் மட்டுமே முடியும்.
கவிதை என்பது ஒரு மனிதனின் மனதில் தோன்றும் எண்ணங்களை அழகுத் தமிழில் எளிய சொல்லாடலுடன் அனைவருக்கும் புரியும் வண்ணம் கொஞ்சம் கற்பனைவளமும் சேர்த்து எளிய வரிகளில் தருவது.கடவுள் கனவு கண்டு பூவுலகு படைத்தான்.கவிஞன் கனவு கண்டு கவிதைகள் படைத்தான்.இலக்கியங்கள் பிறந்தது.
ஆற்றல் நிரம்பிய சொற்கள் பொங்கி வழிவது கவிதை. இது கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் சொன்னது.நல்ல கவிதை என்பது பளிச்சென்று தெரிந்து விடுகிறது குப்பையில் கிடக்கும் பொற்காசு போல என எழுத்தாளர் சுஜாதா சொல்கிறார்.
கவிதைகள் ஆழ்மனதில் படிவதில்லை.அப்படிப் படிந்தால் அது என்றைக்கும் நினைவில் இருக்கும். எப்போதோ படித்த திருக்குறள் ஞாபகத்துக்கு வருகிறது. திரைப்பட பாடல்களும் நினைவுக்கு வருகிறது. எழுதியவரின் பெயரும் நினைவுக்கு வருகிறது. ஆனால் இப்போது படிக்கும் கவிதைகள் நினைவுக்கு வருகிறதா.கவிதையைச் சொன்னால் கவிஞர் பெயர் நினைவுக்கு வருவதில்லை. பெயரைச் சொன்னால் கவிதை நினைவுக்கு வருவதில்லை.
படித்தவனுக்கும் பாமரனுக்கும் புரியும் படி எழுதிட வேண்டும்..வாசகர் எழுத்தாளரின் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொள்வான் என்று எதிர்பார்க்க முடியாது. புரிந்து கொண்டால் சிறப்பு. வேறு பார்வையில் புதிய கோணத்தில் புரிந்து இன்னும் சிறப்பு. இதுதான் உண்மையான கவிஞனுக்கு கிடைத்த வெற்றி...
மகேஸ்வரி கிருஷ்ணசாமி
MSC,BLISC, DPRI.ED
இராஜபாளையம்
அருமையான விளக்கம்...மிகவும் நன்றிங்க கவியே..!
ReplyDelete