2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)
1. பகலை காணவில்லை/
தூக்கம் தொலைத்த மனிதர்கள்/
இரவு நேர உணவுக் கடைகள்/
_ சுதந்திர தாசன்
2. இரவு நேரம்//
பின் தொடருகின்றேன்//
மின்மினிப் பூச்சிகள்.
-தமிழ் தம்பி...✍️
3. மூட்டிய அடுப்ப
பிரகாசமாய் உள்ளது
அம்மா முகம்
... தட்சணா மூர்த்தி
4. இரவில் உலகம்/
அமைதியாகத் தூங்குகிறது/
மடியில் குழந்தை/
-யதன் கணேஸ்
5. நடு இரவில்/
கருப்பாகவே தெரிகிறது/
பச்சை மரம்.
-செ.ஸ்ரீகணேஷ் சூர்யா.
6. இரவு நேரத்தில்//
சற்றே அச்சமாக இருக்கிறது//
பேய்க் கனவு//
---தஞ்சை விஜய்...
7. குழம்பிய நீரிலும்/
தெளிவாகத் தெரிகிறது/
நிலவின் பிம்பம்/
-ராதாமணி
8. வானத்து நட்சத்திரங்கள்/
மின்னிக் கொண்டிருக்கின்றன/
மின்மினிப் பூச்சிகள்/
-க.யேசுசகாயம்
இலங்கை
9. தூங்காத இரவுகள் //
விடிய விடிய தள்ளாடிக் கொண்டாடுகின்றன//
வாலிப வயதுகள்//
-கவி நிலா மோகன்
...... தஞ்சாவூர்..........
10. இரவில் உலகம்/
பளிச்சென்று மின்னுகிறது/
மின் விளக்குகள்!
-சிங்கை கார்முகிலன்
11. நிலவின் ஒளியில்/
இரவில் மலர்கிறது/
வீதி விளக்குகள்/
-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.
12. இரவில் உலகம்
ஆட்டம் அதிகமாகிறது
குடிமகன்கள் கூச்சல்
-வ.பரிமளாதேவி
13. படிக்கும் பிள்ளை/
உறக்கம் மறுக்கும்/
இரவு காவலாளி!
-இரா.கி.இராமகிருஷ்ணன்
14. வானில் நட்சத்திரங்கள் /
விட்டு விட்டு ஒளிர்கின்றது/
மின்மினிப்பூச்சிகள்/
-கரவையூர் அ.அகிலன்
15. கவிந்திடும் இரவு /
நடுக்கம் தருகிறது/
பனியின் குளிர்/
-பாலன் திரு
யாழ்ப்பாணம்
இலங்கை
16. இருண்ட இரவில் /
அச்சம் கூட்ட வருகிறது /
திருடர்களின் நடமாட்டம் /
-ஜெ.அப்சால் அஹமட்
17. இரவில் மட்டுமல்ல /
பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது /
சிவப்பு விளக்கு /
-ஹரிகுமார் வேலாயுதன்,
தருமபுரி.
18. மொட்டை மரங்கள்/
எங்கும் நிரம்பிய பூக்களாய்/
நட்சத்திரங்கள்/
- பாண்டிச்செல்வி கருப்பசாமி
19. மின்சாரம் தடைபட்டும் /
தெளிவாகத் தெரிகிறது பாதை /
நிலவின் வெளிச்சத்தில்!!!!
-கவிஞர்.வினோத்
20. இரவு நேரத்தில் /
அச்சம் தருகிறது /
நாய்களின் சண்டை /
-நழீம் ஹனீபா
21. இரவு வானம்/
மங்கலாய்த் தெரிகிறது/
ஆற்று நீரில்!
-முனைவர்.பெ.வெற்றிநிலவன்,
குடந்தை...
22. பகலோடு இரவாய்/
சுற்றிச் சுற்றி வருகிறது/
உலகம் !
-ஷல்மா ஷாஜஹான்
23. இரவின் நிசப்தம்/
அச்சத்தைக் கூட்டுகிறது/
ஆந்தையின் அலறல்.!
-மு.விஜயசாரதி
24. வெளியூர் பேருந்து//
எங்கும் நிரம்பி வழிகிறது//
பூக்கூடை வாசம்//
~க.குணசேகரன்
25. வானில் நட்சத்திரங்கள்/
எண்ண முடியவில்லை/
மரத்திலுள்ள வௌவால்களை.!
-முல்லை நிரோயன்
26. இருளில் வானத்தில்/
மகிழ்வைத் தருகின்றது /
ஆகாய விமானம்/
-தஞ்சை.கோ.பாலசுப்ரமணியன்
27. பாலூட்டும் தாய்
பாதியில் எழுகிறாள்
உறக்கத்தை விட்டு
-எம்.ஷாஹுல் ஹமீது.
28. நள்ளிரவு கனவு/
தூக்கத்தைக் கலைக்கும்/
சத்தமிடும் பல்லிகள்/
-கோட்டீஸ்வரி ராமசாமி
29. இரவின் அமைதியை //
நித்தம் நினைவுபடுத்துகின்றது //
இயங்கும் கடிகாரசத்தம் //
-பிரபு.ஐயாத்துரை
30. நிலவுடன் வானம் /
பிரகாசமாய் மின்னுகிறது/
குளத்து நீரில் நிலா/
-சென்னிமலை அ.சீனிவாசன்
31. பௌர்ணமி நிலவு/
பார்க்க அழகாக இருக்கிறது/
மின்னும் நட்சத்திரங்கள்/
-ப.சொக்கலிங்கம்
32. இரவின் அமைதி
மீண்டும் வருகிறது
அமாவாசை இரவு
-லினுஜன்
33. கனவுலகம்
விழிக்கையில் உறங்குகின்றது
இரவில் உலகம்.
-செல்லையா வாமதேவன்
34. இரவு நேரத்தில்/
ஒளி வீசி மின்னுகிறது/
இதயத்தில் அவளின் நினைவுகள்/
-கார்த்தி.கோ
35. இரவின் நிசப்தத்தை ஊடறுக்கின்றன/
அங்கும் இங்குமாய்/
மின்மினிப் பூச்சிகள் /
-யோகாபாரதி
36. மயான அமைதி/
விடிகாலை ஆனாலும் பயம்/
சுவர்க்கோழிச் சத்தம்/
-சாக்கை பொன்னழகு
37. நடுநிசி காவலர்கள் /
நடைமேடையில் உறங்குகின்றனர் /
பிச்சைக்காரர்கள்
- லதா
38. இரவின் இருட்டில்/
ஆங்காங்கே வெளிச்சங்கள்/
கையில் அலைபேசி!
-ஆ.பூமாதேவி
39. இரவில் உலகம்//
நிசப்தமாய் உறங்குகிறது//
விழித்திருக்கும் காவலாளி//
-செல்லம் ரகு
40. இராக்கால உலகம்/
படிப்படியாய் இளமை பிறக்கிறது/
வளர்பிறைச் சந்திரன்/
-தோப்பூர் கவி நாஸிர். எம். இர்ஷாத்
41. சூரியன் மறைந்ததும்/
ஒளி விளக்குகளால் மின்னுகிறது /
கோவில் திருவிழா !/
- பொத்துவில் மீராசாகிபு சமூன்
42. தார்ச்சாலைப் பேருந்து//
இருளைக் கிழித்துச் சென்றது//
வானில் மின்னல்!!
-நாகலெட்சுமி இராஜகோபாலன்
43. இரவு நேரத்தில்//
காவலர்கள் ரோந்து//
திருடர்களுக்கு இடையூறாய்//
-ஜெய வெங்கட்
44. இருட்டிய பிறகு//
வெளுக்கத் தொடங்குகிறது//
மல்லிகைத் தோட்டம்//
-எம்.ஆர்.ஜெயந்தி
45. இரவில் உலகம் //
மூழ்கிக் கொண்டிருக்கிறது //
கொள்ளைநோய் //
-உடுமலை சே.ரா . முஹமது
46. இருண்ட இரவு//
பயமில்லாமல் விளையாடுகின்றன//
வானில் நட்சத்திரங்கள்.
- கீதாரமணி
47. இரவில் உலகம்
தெளிவாகத் தெரிகின்றன//
பறக்கும் மின்மினிப் பூச்சிகள்!!
-அனுராதா நாகப்பன்
48. இரவின் நிசப்தம்/
பயம் தருகிறது/
மிருகங்கள் நடமாட்டம்/
-ஜெயலெட்சுமி மாணிக்கம்
49. அணைத்த மின்விளக்கு/
விட்டு விட்டு ஒளிர்கிறது /
தாத்தாவின் சுருட்டு./
-மணி தியாகேஸ்
50. இரவின் உலகம்/
நிசப்தமாக இருந்து கொண்டிருக்கிறது/
மழலையில்லா வீடு/
-சுமி முருகன்
51. இரவு நேரத்திலும்/
ஊரைச் சுற்றி வரும்/
காவலர் வாகனம்/
-கலாராணி லோகநாதன்
52. நிழல் படம்/
அழகாக காட்சியளிக்கிறது/
ஆலிவ் மரம்/
-நிஸ்றின் யூசுப்.
53. வெளியில் வரவே /
பயமாய் இருக்கிறது/
இரவில் உலகம்/
-கலைச்செல்வன்,கடலூர்,
54. நிலவில்லா வானம்/
விளக்கின்றி கவலையில் இருக்கிறது/
ஏழையின் கூரைவீடு/
-மு.வா.பாலாஜி
55. இரவு நேரம்/
இனிதே வரவேற்பு/
புதுமண தம்பதிகள்/
-த. கலைவாணி சதீசு, புதுச்சேரி
56. வெற்று யாசகத்தட்டு /
இரவு உணவால் நிரம்புகிறது /
நாயின் வயிறு /
-மனோகரி ஜெகதீஸ்வரன்
57. நிலாக்கால நள்ளிரவு/
விரகத்தோடு கூவிக் கொண்டிருக்கிறது/
துணையிழந்த குயில்!
-மெ. கிஷோர்கான்
58. சுழலும் பூமியில்//
இருள் கவ்வத் தொடர்கிறது//
அமாவாசை நாள்//
-ஐ.துஷ்யந்தன்
59. இரவில் உலகம்/
அமைதியாக நகர்கிறது/
விடியலை தேடி!
-சு.கேசவன்
60. இருட்டு நிறைந்த அறை
மேன் மேலும் இருட்டாக
அமாவாசை
-பாண்டியராஜ்
61. இரவுப் பொழுதில்
விளக்கின் ஒளியில் சிக்குண்டது
படர்ந்த இருள்.
-ந.மீனாகோபி
62. இருண்ட வீடு/
கண்களுக்கு தெரியவில்லை/
தாத்தாவின் கைத்தடி/
✍️பா.ச.கண்ணன்
63. மாலைப் பொழுதில் /
இருண்டு கொண்டு வருகிறது /
மழை மேகம் /
-அருண் சிவா...
64. இருள் படர்வதும்/
அழகாய்த்தான் தோன்றுகிறது/
வானில் நிலா./
-கவிஞர் ச.சுரேஷ். கும்முடிப்பூண்டி
65. தூங்கும் உலகம்/
இரகசியமாய் எழும்புகிறது/
மானுட சமத்துவம்../
-ஐ.தர்மசிங்
66. நிலவின் ஒளியில்/
தெளிவாய்த் தெரிகின்றன/
மரக் கிளைகள்/
-சி.பாக்கியராஜ்
67. இரவில் உலகம்/
நடுக்கிக் கொண்டி.ருக்கிறது/
வானில் நட்சத்திரம்../
-ஷர்ஜிலா யாகூப்
68. இரவில் உலகம்/
இதழ் திறந்து சிரிக்கிறது/
நட்சத்திர கூட்டம்./
-வைர. வசீகரன், யாழ்ப்பாணம்
69. இரவில் பேய்க்கனவு/
மன நிம்மதியைத் தரவில்லை/
ஓட்டுநரின் உறக்கம்/
-மா.சு.திருக்குமரன்.
70. நிலவு மகள்/
நிலத்தில் நீந்துகிறாள்/
குளத்தில் அவள்./
-ஐ.எம்.ஜெமீல்.
71. இரவுப் பொழுது/
உறக்கமில்லாமல் தவிக்கிறது/
வானத்தில் முழுநிலா/
-வைர. நாகராசன்
72. இருண்ட காடு /
சத்தம் அதிகமாக உள்ளது /
காட்டுவாசிகள் சண்டை ./
-கவிகெஜா
73. அமாவாசை இரவு /
நிம்மதியைத் தருகிறது /
நிசப்த அமைதி /
-ரகுமான் நபீர்
74. இரவு பொழுது/
இனிமையாக இருக்கிறது/
காதலியின் நினைவு./
-சக்திவேல் இராவணன்
75. இரவுப் பணி /
காவலாளியின் கூடவே வருகிறது /
முழு நிலவு //
- கி.இரகுநாதன்
76. வீதியோரக் கடைகள்/
வாழ்வை இழக்கின்றன/
விட்டில் பூச்சிகள்../
-கிருஷ்ணலதா வசீகரன், ஜெனீவா- சுவிஸ்
77. இரவில் உலகம்/
பேரிரைச்சலாக இருக்கிறது/
இடியும் மின்னலும்/
-கிரானியன் அபிலாஷ்
78. இரவில் உலகம்/
மறையாமல் இருக்கிறது/
ஏழையின் பசி/
-வட்டக்கச்சி வினோத்
எங்களுடைய கவிதைகளையும் சேர்க்க முடியுமா
ReplyDelete