எது கவிதை (எஸ்.செல்வி)
எது கவிதை?
கரு
கதை
விதை
கவிதை
கவிஞனின் சிந்தனை அற்புதமானவை
அவர்களின் சிந்தனை கடல் போல் விரிந்து
காய்ந்த மரத்திலும் கனிவரவைக்கு கையெழுத்து !
உணர்வுகள் தூண்டப்பட்டு உள்ளத்தில் இருந்து வரும் வரிகள் கவலையெனில் கண்ணீர் வரவைக்கும்.
உலகில் உள்ள மூலை முடுக்கெல்லாம் இசையாய் ஒலித்துக்கொண்டேதான் இருக்கிறது ஒருவரின் மகிழ்ச்சி, கவலை கண்ணீர் ,வெறுமை , ஊடல்,கூடல்,அழுகை,கோபம், ஏமாற்றம் இவைகளை பிறரிடம் சொல்ல முடியாதப் போது தனிமையில் சிந்திக்கிறார்கள்.
அதை கையெழுத்தால் காகிதத்தில் எழுதுவார்கள் சில நேரம் மெட்டுகள் இல்லாமலே மனதில் முணுமுணுத்து வார்த்தையால் வெளிப்படும் வரிகள்.
ஆகாயத்தில் நிலா அந்தரத்தில் இருப்பது தெரிந்தும் அதற்கு ஆடை கட்டி அழகு பார்ப்பதே கவிஞனின் சிந்தனை!
உதாரணம்:
வானத்து வெண்ணிலவே
வழி தெரியாத முழு நிலவே
காதலுக்குத் தூதுபோ
காதலனிடம் கூட்டிப்போ !
ஏங்கி நான் தவிக்க
ஏகாந்தம் என்று நீ
ஏமாற்றிப் போகாதே
என்னவனிடம் கூட்டிப்போ !
பௌர்ணமி முழு நிலவே
பால்போன்ற வெண்நிலவே
மேகத்தில் நீ மறைய
மோகத்தால் பார்த்தது யாரோ !
விண்மீன்கள் உனைத் தழுவ
விளக்கேற்றி நீ மிளிர
வியப்பாகப் பார்க்கின்றேன்
விடைகொடு பெண் நிலவே!
எனவே நிலவு எம்மிடம் பேசுவது இல்லை
எமக்கு தூது செல்வதும் இல்லை
ரசனை இருக்க வேண்டும் எழுதுகை எளிமையான முறையில் வரிகளால் பிறர் மனதை கவரும் விதத்தில் வரிகளை இலக்கணம் இலக்கியத்துடன் உச்சரிக்கும் வரிகளில் ஓசை வெளிப்பட வேண்டும்.
கவிதைகள் வாசிக்கும் போது அந்த கவிதையை மீண்டும் வாசிக்க ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
#எது__கவிதை
நமது மனதில் எதேனும் ஒரு #கரு முதலில் தோன்றும் பின் இதற்கு எப்படி கதை எழுதலாம் என தோன்றும் அந்த கதையை செதுக்கி வரிகளால் விதைத்து பரப்ப வேண்டும் .
கவிதை வரிகள் ஒரு மனிதனுக்கு வழிக்காட்டலாக ,வலிக்கு மருந்தாக, வாழ்க்கைக்கு உதவியாக, மகிழ்ச்சியடைவதற்காக , சமூக சிந்தனையுடன்,விழிப்புணர்வைத்தூண்ட வேண்டும்.
கல்வியைக் கற்றேன் நான்
கவலைகள் மறக்கவில்லை
கண்ணீரே வாழ்கையாய்
கவிதையே எனக்குத் துணையாய் !
ஆர்வம் கொண்டே நான்
அழகியத் தமிழ் மொழியில்
இணையத்தில் உலா வந்து
இதயத்தில் இடம் பிடித்த!
கவியுலகப் பூஞ்சோலை
கவிஞர்களின் பெருஞ்சோலை
உலகெல்லாம் பரவவே
உளமார வாழ்த்துகிறேன் /🙏
நன்றி
--------------------
எஸ். செல்வி ✍
இலங்கை
Comments
Post a Comment