1.தன்முனைக் கவிதைகள் (நட்பின் பயணம்)

 

எளிதில் விளங்கா தத்துவம் 

என்றாலும் அதுவே மகத்துவம்

நமக்கான உறவை நாமே 

தேர்ந்தெடுக்கும் பெருவரம்


             தமிழ் உணர்வாளன் 


நட்பின் பயணம் தொடங்குவது/

இளமையில் என்கிறது வேதம்.../

எத்தனைப் பிறப்போ அறியவில்லை/

உன்னுடன் என் பயணம்./


செல்வா ஆறுமுகம்


பள்ளியின் நினைவுகள் /

பசுமையாய் இருக்கின்றன /

உன்னோடு நானும் /

என்னோடு நீயும் நட்போடு /


த.யாசகன்


நட்பின் பயணம்/

தொடர்ந்து செல்கிறது/

மதுச்சாலையில் மயங்கிய நிலையில்/

நண்பர்கள் கூட்டம்/


வட்டக்கச்சி

 வினோத்


பால்ய நதியில் / 

நங்கூரம் பாய்ச்சா கப்பல் / 

உடன் இருந்த நட்புகள் / 

இன்றும் என்றும் இனிதே...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன்,

குடந்தை


அழகிய நட்புப் பாலங்கள்//

நெஞ்சில் அழியாதக் கோலங்கள்//

வேசம் இல்லாத நட்புணர்வு//

நேசம் மறவாமல் தொடருமே//


~க.குணசேகரன்


துவண்டிடும் பொழுது //

தோளில் தாங்கிடும்//

வாழ்வில் தொடருமே//

நட்பின் உன்னதம்//


ஜெய வெங்கட்


அன்போடு அரவணைப்பும்//

அளித்திடும் நட்புக்கள்//

வாழ்நாள் முழுவதும்//

தன்னம்பிக்கை ஊட்டிடுமே//


---தஞ்சை விஜய்...


நெடுந்தூரப் பயணமும் 

நெகிழ்வைத் தந்தது!

பால்ய நண்பனைத்

பார்த்த தருணமே!!


-இரா.கி.இராமகிருஷ்ணன்


பள்ளி நட்பு

இன்றும் தொடர்கிறது

நட்பெனும் அகராதியை

எம் வாழ்வில் காண்பீர்


முல்லை நிரோயன்


நல்ல நண்பன்//

இறைவன் அளித்த வரம்//

வாழ்ந்தாலும்  தாழ்ந்தாலும் //

பயணிப்பான்  என்றென்றுமே//


தாழை.இரா.உதயநேசன்


நன்றியுள்ள நட்பு//

நாளும் தொடருமே//

நன்றிகெட்ட நட்பு//

என்றோ வீழுமே//


க.யேசுசகாயம்

இலங்கை



நீண்ட பயணம் /

பாதை மாறிய பின்னும்/

தொடர்கிறது பாட சாலையில்/

பழகிய நட்பு /


ரகுமான் நபீர்


முதுமை வரையும் தொடரும்//

குழந்தையில் மலரும் நட்பு//

சுயநலம் எதுவும் இல்லாமல்//

தூய்மையான அன்பைத் தொடர்ந்தால்...//


ஐ.தர்மசிங்


எங்கோ இருக்கும் தோழிக்கு/

துன்பம் என்றதும் துவண்டேன்/

என்னைக் கண்டதும் துன்பத்திலும்/

அமைதியடைந்தாள் கை கோர்த்து!


ஆ.பூமாதேவி


நிச்சயமில்லா உலகில் 

நீடித்திடும் உறவுகள் //

வாழ்வின் முடிவு வரை

தொடரும் சொந்தங்கள் //


ச.சதீஷ்குமார்

இலங்கை


பள்ளிப் பருவத்திலே

மலர்ந்த நட்பிது/

இரத்த பந்தத்திற்கும்

மேலான உறவிது/


ராதாமணி

 

உணர்வுகளுடன் ஒத்திசைக்கின்ற

பிம்பங்களாகித் தொடருகிறது

அணை போடாத

தூய அன்பு!


ஜன்ஸி கபூர்


நல்ல நட்பின் பயணம்/

வாழ்வில் என்றும் பசுமையாகும்/

கெட்ட நட்பின் உறவால்/

துயரமே மனதிற்கு சுமையாகும்/


நழீம் ஹனீபா


கற்பான நட்பது/

காலமெல்லாம் தொடருமே/

உயிரையும் தந்திடும்/

உன்னத அன்பதுவே/


கலாராணி லோகநாதன்


காலம் கடந்தாலும்/

களையாத அன்பு/

கண்ணீரிலும் காக்கும்/

கவசமாய் நட்பு!!


கி.அனந்த்


பிரிந்த நண்பி

மீண்டும் கிடைத்தாள்

தாயாய் என்னைக்

காக்க முனைந்தாள். 


மணி தியாகேஸ்


நட்பின் பயணம்.


பள்ளி கல்லூரியில் ஆரம்பித்த/

தொடர் நட்பின் பயணம்/

இன்றும் தொய்வின்றி தொடர்கின்றது/ கூட்டு தொழில் கூட்டணியால்/


நா.த.சுரேஷ் குமார்


உரிமையாய் பழகும் நட்பு

உயர்வான விளைவை நல்கும்

தெரியாதோர் என்னும் போதில்

தெளிந்தபின் பழகல் நன்றாம்


பாலன் திரு 

யாழ்ப்பாணம் 

இலங்கை


கடனில் மூழ்கி/

சாகத் துணிந்தான்/

மீட்டு வந்து மனிதனாய்/

மாற்றியது.உயிர்நட்பு/


சாக்கை பொன்னழகு


நட்பின் பயணம்/

வகுப்பறையில் தொடங்கியது.

தொடங்கிய பயணம்/

மனைவின் வருகையால் முறிந்தது.


திருச்சிற்றம்பலம் சுரேஷ்


எதிர்பார்ப்பில்லா பந்தம்/

ரத்தசம்பந்தமில்லா சொந்தம்/

எல்லாமும் பகிரலாம் நட்பில்/

பயணம் மிக நீண்டது/


மு.வா.பாலாஜி


நிழல் தொடராப்/

பொழுதும் தொடர்கிறது/

தன்னலம் இல்லா/

நட்பின் பயணம்/


_புதுவை சரவணன்


எத்தனையோ பயணங்கள்

மறந்து போகும்.

நட்பின்பயணமோ

இறுதி வரை .


சிவானந்தம்  கோவில்பட்டி


பிரிந்திருந்த தோழமைகள்/

இணைந்து கொண்டது/

இடைவெளி இல்லாது /

இறுக்கமும் குறைந்தது/


ஷல்மா ஷாஜஹான்


புரிதலுடன் அனுசரித்து /

நடந்தாலே தொடரும் நட்பு /

உணர்வுடன் சங்கமித்த /

உறவே அது என்பதால் /


மனோகரி ஜெகதீஸ்வரன் 


நட்பின் பயணத்தில்/

நன்மைகள் விளையும்/

சிந்தித்துப் பார்த்தால்/

சிறகுகள் விரியும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.


இன்று வரை பயணிக்கிறது

இனம் புரியாத நட்பு/

அன்றொரு நாள் ரயில்

பயணத்தில் சந்தித்ததிலிருந்து/


எம் ஷாஹுல் ஹமீது.


நட்பின் பயணம்/

நாளும் தொடரணும்./

நல்லோரின் உறவு/

பற்றிப் படரணும்/


கீழ்கரவை குலசேகரன் 

இலங்கை


நட்பின் பயணம் /

நிலைத்து வாழ்கிறது /

இணைப்பால் உலகினில் /

வெற்றி நடைபோடுகிறோம் /


பிரபு.ஐயாத்துரை


நட்பின் பயணம்/

நினைவுகளில் பூவாசமாய் /

பிரிவெனும் முட்களும்/

குத்துகின்றன கூடவே/


விஜயா குமரன்


நல் நட்பின் பயணம்/ 

என்றும் முடிவதில்லை/ 

காலம் கடந்தும் வாழும்/ 

அவ்வுயிர் நட்பு  


- கீதாரமணி


சங்கிலித் தொடராய் 

நட்பின் இணைப்பு 

சாதி மதமற்ற 

சமத்துவத் துடிப்பு  ! 


பாவலர் சீ விக்கிரமன்.


பாதைகள் மாறினாலும் //

நட்புப் பயணம் தொடருமே //

பழகிய நினைவுகளால் //

பாச ஞாபகங்கள் தாலாட்டுமே //


கவி நிலா மோகன்


பள்ளிப் பருவத்தில்/

நட்பாகக் கலந்தவளே/

பல்லுப் போனாலும்/

நினைவுகள் இனிக்கிறதே/


நஷீரா ஹஸன்


நட்புகளின் வரவு/

நல்வாழ்வின் அடித்தளம்/

துன்பங்கள் என்றும் இல்லை/

மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.


த. கலைவாணி சதீசு


தன்முனைக் கவிதை


நம்பிக்கை தளர்ந்த நேரத்தில் /

கூடவே வந்து  கைகொடுக்கும்/

ஆறாத துன்பமும் ஆற்றிடும்/

உறவுகளைவிட உயர்ந்தது நட்பே/


மகேஸ்வரி கிருஷ்ணசாமி


நீயும் நானும் /

நண்பர்கள் என்கிறோம்/

உணர்வுகளை புரியாதவர்கள்/

ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை.


     - செ. செல்வமணி செந்தில்



உண்மை நட்பில் 

உள்ளம் மலர்ந்தேன்  

உன்னிடம் பேசினால் 

ஆறுதல் கிட்டும் 


நிர்மலா சிவராசசிங்கம்  


நட்பெனும் அதிகாரம் /

நாள் தோறும் ஆறுதலே /

அதை அளந்து பார்த்திடவும் /

அளவுகோல் இங்கு இல்லையே /


யோகாபாரதி


உள்ளம் ஒன்றிடும் உணர்வு

உண்மை அன்பே நட்பு

கள்ளம் இல்லா உள்ளம்

கழனியில் பாயும் வெள்ளம்


புதுவைத் தமிழ்நெஞ்சன்


நட்பின் மகிமையில்

துன்பங்கள் நீங்கிடும்

நாள்தோறும் வாழ்க்கை

மகிழ்வுடன் கழிந்திடும்


ஜெ.ராபி


என்னவென்று தெரியாது 

நிச்சயம் ஒரு நாள் 

வென்ற பின்னரே ஓயும் 

நட்பின் பயணம் 


    பாண்டிய ராஜ்


தோள் கொடுத்துத்

துயரம்  தாங்கும்

நிழலாய்த்  தொடரும்

இறுதிவரை   தூயநட்பு


வ பரிமளாதேவி


உண்மை நட்பு

உரிமை எடுக்கும்

உறுதி தளராது

பிரிவு நேராது..!


ஜெயலெட்சுமி மாணிக்கம்


ஆழமான நட்பு/

காலங்கள் கடந்தவை//

அடித்தாலும் விலகாது/

ஓரிடத்துத் தண்ணீர்!!


நாகலெட்சுமி இராஜகோபாலன்


கரம் பிடித்து/

நெடுந்தூர நடை பயணம்/

கால்களின் வலி/

தெரியவே இல்லை


சிங்கை கார்முகிலன்



பெற்றோர் மறைந்தும்

உற்றோர் ஒதுங்கியும்

நெடுந்தூரம் வரும்

நட்பின் பயணம்

                                                                     

 கலை செல்வன், கடலூர்

     

எங்கோ பிறந்தோம்//

ஒருவராய் மலர்ந்து இன்புற்றோம்//

இயற்கையால் பிரிந்தாலும்//

 வாழ்வோம் இதயத்தில்.


க. அய்யம்மாள், மதுரை     


சிதைக்குச் செல்லும் வரை /

சிதையா நட்பு வரம் /

பதைக்கும் நேரத்திலும் /

பார்க்காத நட்பு பாரம் /


 - கி இரகுநாதன்


உயிருடன் கலந்திடும் நட்பு /

உறவாக தொடரும் வாழ்வில் //

எதையும் தாங்கிடும் உள்ளங்கள் //

இனிதே தொடரும் பயணம் .//


                   கவிகெஜா


முரன்பாடுகள் பல உண்டு

சூரியனும் சந்திரனுமாய் மனதில்

உதிரும் பூவானாலும் மலர்கிறோம்

மண்ணில் உரமாகும் வரை....


அன்புடன்

பிரபு முத்துலிங்கம்..


நட்பின் பயணம்/

நன்றாய்ச் சென்றது இளமையில்,/

வந்த பணம்/

வழியையே மாற்றிவிட்டது...!


செண்பக ஜெகதீசன்...


அன்பில் மலரும்

நட்பானது நீடிக்கும்

அகவை கடந்தாலும்

உறவாய் பயணிக்கும்.


ந.மீனாகோபி


நட்பின் பயணம் 

இனிமையாகத் துவங்குகிறது 

முடிவு என்பதுதான் 

விடுகதை யாகிவிடுகிறது !


---முத்துகருப்பசாமி ந


உயிர் காப்பான் தோழன்

உண்மை நட்பு உயிர்வாழும்

இடுக்கண் களைவதே நட்பு

வடுக்கள் இல்லாதது நட்பு


கலா கணேசன்


உயிர்க்கு அன்பை

கற்றுக் கொடுக்கும்

இருளில் நடந்தாலும்

ஆடிப்பாடியே திரியும்


           ✍️அ.அனிஷ்நிர்மல்


பாசத்துடன் நேசிக்கும்

உன்னதமான நண்பர்களுடன்

நட்பின் பயணம்

வாழ்க்கையை வளமாக்கும்//


கணேஷ்ராஜ் லண்டன்

Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)