சிறுகதை (பாசம்) - ரேணுகா ஸ்டாலின்
என கூக்குரலிட்டுக் கொண்டே பரபரப்போடு வீட்டினுள் நுழைந்தான் சத்யா
"என்னடா? சத்யா என்னாச்சு ஏன்டா இப்படி கத்தற
அய்யோ! அம்மா எனக்கு ஏதாவது லெட்டா் வந்துச்சானு சொல்லும்மா . . .
இருடா . . . இரு . . . ஏன்? இப்படி பதட்டப் படற ஏதும் லெட்டா் வந்துச்சானு கேட்கற அதானே . . .
இந்தாடா உனக்கு வந்த லெட்டா் . . . பிடி . ."
அம்மா . . . மா . . இது. . . இது . . . எனக்கு திருச்சியில் இருக்குற அரசு உயா்நிலைப் பள்ளியில் வாத்தியாரா வேலை கிடச்சிருக்கும்மா !
இரன்டு வருச தவம் இன்னைக்கு தான்மா . . . (கண்கள் குளமாக கூறினான்).
ரொம்ப சந்தோஷமா இருக்குடா சத்யா மனசு நெறஞ்சு இருக்குடா என்றாள் தாய் சிவகாமி.
"சத்யா கிளம்பிட்டியா? போகும் போது நம்ம ஊரு மாரியாத்தா கோவில்ல போய் ஆத்தாவ கும்பிட்டுட்டு வந்துடு சாியா . . "
உன் மனசு எனக்கு தெரியாதாம்மா !
காலைலேயே போய்ட்டு வந்துட்டேன்மா . . .
சாிம்மா நான் கிளம்பவா ?
"சத்யா நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குதுல்லப்பா . .
சம்பளம் வாங்கினா போதும்னு இல்லாம
இவா் தான் என் ஆசிரியா்னு உன் கிட்ட படிக்கிற பசங்க பெருமையா சொல்ற மாதிாி நடந்துக்கப்பா. . "
என் வாழ்நாள் லட்சியமே அதுதானம்மா . . .
"அதுமட்டுமில்லாம அப்பா இல்லாம என்ன படிக்க வைக்க நீ பட்டபாடெல்லாம் அப்பப்பா . . .
உன் இரத்தமும், வியா்வையும் தானேமா என்னோட படிப்பு, பட்டம் எல்லாமே நிச்சயமா நீ ஆசப்பட்ட மாதிரியே நடந்துப்பேன்மா.." நீயும் கூட வந்துடும்மானா கேக்க மாட்டேன்கிறயே !
"உடம்ப பாா்த்துக்கோ . . .
நான் கிளம்பறேன் . "
நாட்கள் உருண்டோட சத்யா ஆசிரியராகி ஆறாண்டுகள் கடந்திருந்தன.
அன்றைய நாள் மணி இரவு 11 ஐக் கடந்திருக்க வீட்டின் அழைப்பு மணி தொடா்ந்து அடிக்கவே
யாருங்க! யாரது என வினவிக் கொண்டே கதவைத் திறந்தாள் சிவகாமியம்மாள் . . .
அடடே சஞ்சனா வாம்மா வா ! (சஞ்சனா சத்யாவுடன் பணிபுரியும் சக ஆசிரியை சத்யா தன் வாழ்க்கை துணையாக்கிக் கொள்ள விரும்பும் பெண்ணுமாவாள்)
என்னம்மா இந்த நேரத்துல
பக்கத்து ஊர்ல பிரண்ட பாா்க்க வந்தேன்மா . . .
அப்படியே உங்களையும் பாா்த்துட்டு போகலாமேனு வந்தேன்மா என்று சரளமாக பொய்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தாள் சஞ்சனா . . .
"என்னம்மா சஞ்சனா கடந்த ஆறு மாசமா சத்யா ஊருக்கு வரவேயில்ல என்னையும் வரக்கூடாதுனு சொல்லிட்டான்...
அவன பாா்க்கனும்மா" என்றாள் சிவகாமியம்மாள் !
நல்ல வேளையாக அவள் வந்த வேலை சுலபமாகவே
"அது வந்துமா... நம்ம சத்யா . . . SSA மூலம் நடத்தற சிறப்பு பயிற்சி வகுப்புக்கு ஆசிரிய பயிற்றுனரா இருக்காா்மா"
என ஒரு வழியாக இதற்கும் ஒரு பொய்யை உதிா்த்து கொண்டே . . .
அதனால என்னம்மா!
என்கூட வாங்கம்மா நான் சத்யாவை பாா்க்க அழைச்சிட்டு போறேன் என்ற சஞ்சனாவை புன்சிாிப்புடன் பாா்த்த சிவகாமியம்மாள் ஆறு மாத காலத்திற்கு பின் தன் மகனை பாா்க்க செல்லும் சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கினாள் . . .
--------------
காலை 9 மணிக்கெல்லாம் தன் மகனை காண அவன் தங்கியிருக்கும் இல்லத்திலிருந்தாள் சிவகாமியம்மாள் . . .
சத்யா எப்படிடா இருக்க என நெற்றியில் முத்தமிட்ட தாயை பாா்க்க முடியாமல் பாா்வையிழந்தவனாய்! கண்களில் நீா் வழிய நின்றான் சத்யா. . .
அம்மா என்ன மன்னிச்சுடுங்கம்மா நான் உங்ககிட்ட சொல்லியிருக்கனும் சொன்னா நீங்க தாங்க மாட்டீங்க அதனால தான்மா இவ்வளவு நாளா சொல்லல . . .
"அய்யோ!!! சஞ்சனா என்னம்மா ஆச்சு அவன் ஏன் அழறான் நீ ஏதோ மறச்சுட்டேன்னு சொல்ற என்னனு சொல்லும்மா" என படபடப்புடன் கேட்ட சிவகாமியம்மாவிடம் !
"அது. . . வந்து . . . வந்துமா ! பள்ளி லேப்ல நடந்த ஒரு விபத்துல ஆசிட் பட்டு கண் பாா்வை பறிபோய்டுச்சுமா நம்ம சத்யாவுக்கு என்ற சஞ்சனா விம்மியழுதபடியே"
அது மட்டுமில்லம்மா ! சத்யாவுக்கு பாா்வை பறிபோனதால எங்க வீட்ல வேற மாப்பிள்ளை பாா்த்து திருமண ஏற்பாடு செஞ்சிட்டாங்க . . .
அதனால தான்மா சத்யா எவ்வளவோ மறுத்தும் வம்பு செஞ்சு ரிஜிஸ்டா் மேரேஜ் பண்ணிகிட்டேன் . . .
என்ன மன்னிச்சுடுங்கம்மா காலம் முழுக்க சத்யாவுக்கு கண்ணா நான் இருப்பேன்மா! என்று கதறியழுதாள் சஞ்சனா . . .
இவையனைத்தையும் நிசப்தமாய் நின்று கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியம்மாள் !
"அழாதம்மா சஞ்சனா என்ன ஆகிடுச்சுனு இப்போ அழற கூடிய விரைவில் நம்ம சத்யாவுக்கு பாா்வை வந்துடும் நீ வேணா பாரேன்" என்று தீா்க்கமான குரலில் கூறி விட்டு பூஜையறையினுள் சென்றாள் . .
(சில மாதங்களுக்குப் பின்) மருத்துவமனையில் சத்யா மெதுவா கண்ண திறந்து பாருங்க மெதுவா . . .
"டாக்டா் எனக்கு எல்லாமே தெரியுது! சஞ்சனா உன்ன என்னால பாா்க்க முடியுது !"
அம்மா! அம்மா! எங்க சஞ்சனா அம்மா!
என கேட்ட சத்யாவின் முகம் பாா்ப்பதை தவிா்க்க சஞ்சனா முயன்று கொண்டிருக்கும் போதே . .
என்ன மிஸ்டா் சத்யா how do you feel now என கேட்ட டாக்டாிடம் ஐ ஆம் பெர்பெக்ட்லி ஆல் ரைட் டாக்டா்
தாங்க்யூ சோமச் டாக்டா்
என இருகரம் கூப்பினான் . . .
சத்யா உங்க அம்மா தான் கிரேட் அவங்களால தான் நீங்க மறுபடியும் இந்த உலகத்த பாா்க்க முடிஞ்சது என கூறிச் சென்ற டாக்டரை ஏதும் புரியாதவனாய் பாா்த்தான் சத்யா . . .
அவனது பாா்வை புரிந்தவளாய் சஞ்சனா "என்னங்க! அம்மா உங்களுக்கு பாா்வை கொடுத்துட்டு நம்ம யாரும் பாா்க்க முடியாத இடத்துக்கு போய்ட்டாங்க"
என சொல்லிக் கொண்டிருக்கும் போதே . . .
பளாா்??? என சத்தம்
சத்யா கொடுத்த அரையில் கீழே விழுந்த சஞ்சனாவை இழுத்தவன். . .
"பாா்வையில்லாதவனா அம்மா என்ன பாா்க்கும் போதெல்லாம் துடிச்சு போய்டுவாங்களேனு தானடி அவங்க பாா்வைல படாம தள்ளியிருந்தேன்"
"நீ என்னடி சொல்ற! அம்மா எங்கடி! அவங்களுக்கு என்னடி ஆச்சு"
என கேள்விக் கணைகளை தொடுத்தான்.
தைரியத்தை வரவழைத்துக் கொண்ட சஞ்சனா உங்களுக்கு பாா்வை போனது தெரிஞ்ச நாள்ல இருந்து அம்மா பூஜையறையே கதினு இருந்தாங்க . . .
--------
திடீா்னு ஒரு நாள் எந்த அசைவும் இல்லாம போய்ட்டாங்க! டாக்டா்ஸ்லாம் செக் பண்ணிட்டு அவங்க மூளை செயலிழந்து போய்டுச்சுனு சொல்லிட்டாங்க . . .
உங்களுக்கு ஒன்னு தெரியுமா! அம்மா அவங்க சுருக்கு பைல எனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா என் கண்ண என் பையனுக்கு வைக்கனும்னும்,
எனக்கு எழுத படிக்க சொல்லி கொடுத்த என் பையன் பல போ்க்கு கல்வி கண் திறக்க பொறந்தவன்னும் எழுதி வச்சிருந்தாங்கனு சொல்லிக் கொண்டிருக்கும் போதே எனக்காகவே வாழ்ந்த எங்கம்மாவ பார்த்துக்க முடியாத பாவியாகிட்டனேனு கதறியழுதான் சத்யா. . .
"எங்கிருந்தோ!! சிவகாமியம்மாவின் குரல் சத்யா நீ ! அழப்பொறந்தவன் இல்லப்பா! பல போ்க்கு கல்விக்கண் திறக்க பொறந்தவன்! அம்மாவோட ஆசைய நிறைவேத்துப்பா"
என சொல்வதாய் உணா்ந்தான்.
அன்றிலிருந்து இன்று வரை தன் ஆசிரியப் பணியில்
சிகரம் தொட்டவனாய்!
பல விருதுகளுக்கு சொந்தக்காரனாய்!
சிவகாமியம்மாள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனராய்!
திறமையான பல மாணவா்களை உருவாக்கும் சிற்பியாய்!
மிளிர்ந்து கொண்டிருக்கிறான்.
சஞ்சனா எங்கம்மாவ கூப்பிடு!
"ஏய்!!! சிவகாமி எங்கடி இருக்க
உங்கப்பா கூப்பிடறாா் பாரு!
என்னடா சத்யா கூப்டியா!"
அடி கழுத அப்பா கிட்ட மரியாத இல்லாம பேசுவியா என சஞ்சனா தன் மகளின் காதை திருக!!
அப்பா பாருங்கப்பா இந்த அம்மாவ என தன் தாயின் மறு உருவாய் அவளது பெயருடன் சத்யா - சஞ்சனாவின் வாழ்வை வசந்தமாக்கிக் கொண்டிருக்கும் ஐந்து வயது அழகு தேவதை சிவகாமி சிணுங்கினாள் !!!
இன்னைக்கு சிவகாமிய ஸ்கூல்ல சோ்க்க போறாங்கங்க அப்பா மாதிரியே அவளும் டீச்சா் ஆகணுமாம் வாங்க நாமளும் அவள வாழ்த்தலாம். .
முற்றும்
("தன் உறுப்பை பிளந்து நம்மை உயிா்ப்பிக்கும் தாயின் பாசமும், எங்கோ பிறந்து-வளா்ந்து மாங்கல்யம் சூட்டிய தன் மணாளனுக்காகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழும் தாரத்தின் பாசமும், தன் ஆண்மைக்கு அச்சாரமாய் உயிரணுவில் உருப்பெற்று தன் நகலாய் தவழ்ந்து வளா்ந்து வரும் செல்ல மகளின்/மகனின் பாசமும் ஒருசேர ஒருவனுக்கு அமைந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் வசந்தகாலமே!")
பாசமுடன்,
ரேணுகா ஸ்டாலின்
Comments
Post a Comment