3.வெண்பா இலக்கணம் (அகன்)

 

வெண்பா இலக்கணம் - 03.

🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 👀 🎡 

#வரிகளும், #அடிகளும்.

- - - - - - - - - - - - - - - - - - - - - -

#அடி என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் #அடிகளுக்கும்_வரிகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தைப் பார்ப்போமா…


இன்று பெரும்பாலான முகநூல் குழுமங்களில் #நான்குவரிக்கவிதைப்போட்டி, #ஆறுவரிக்கவிதைப்போட்டி என்றே அறிவிக்கிறார்கள். அது பிழையான ஒன்று.

கவிதைகள் அடிகளால் யாக்கப் படுகின்றன. அதை இங்கு பார்ப்போம்.


01. வரிகள்.

- - - - - - - - - -

வரிகள் #உரைநடைக்கானது. 

#இயற்றமிழ்_வரிகளால் ஆனது.

#ஒருவரியில்எத்தனைச்சொற்கள்வேண்டுமானாலும்_வரும். கணக்கில்லை. 

பாடல்களில் வரும் #அடிகள்_அப்படியல்ல. அடிகளுக்குச் சீர்க் கணக்கு உண்டு. அவற்றை கீழே காணலாம்.


02. அடிகள்.

- - - - - - - - - -

இனி, #அடிகளைப் பற்றிப் பார்ப்போம்.

01. #குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.

02. #சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது.

03. #அளவடி - நான்கு சீர்கள் கொண்டது.

04. #நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது

05. #கழி_நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு 

....................சீர்களைக் கொண்டது.

06. #இடையாகுகழிநெடிலடி - ஒன்பது அல்லது  பத்து சீர்களைக் கொண்டது.

07. #கடையாகுகழிநெடிலடி - 11 முதல் 16 வரையிலான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது.


#வெண்பாக்களின்அடிஎண்ணிக்கை.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

குறள் வெண்பா - இரண்டு அடிகளால் ஆனது.

ஓர் அளவடி + ஒரு சிந்தடி.


சிந்தியல் வெண்பா - மூன்றடிகளால் ஆனது.

இரண்டு அளவடி + ஒரு சிந்தடி.


அளவியல் வெண்பா - நான்கடிகளால் ஆனது.

மூன்று அளவடி + ஒரு சிந்தடி.


பஃறொடை வெண்பா - ஐந்தடிகள் - 12 அடிகள்.

ஈற்றடி சிந்தடியாக வரும்.


கலி வெண்பா - 12 அடிகளுக்கு மேல்.


மேலெல்லை இல்லை. எத்தனை அடிகள் வேண்டுமானாலும் எழுதலாம். ஈற்றடி சிந்தடியாக இருக்க வேண்டும்.


நேரிசை வெண்பாவும், இன்னிசை வெண்பாவும் #அளவியல்_வெண்பா எனப் படும்.


முதல் மூன்றடிகள் அளவடி(நான்கு சீர்கள்)யாகவும் நான்காவது அடி சிந்தடி(மூன்று சீர்கள்)யாகவும் வருவது அளவியல் வெண்பா.


தொடை: 01. #எதுகைத்_தொடை.

.- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

#எதுகை: சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். எதுகையில் முதலெழுத்து குறில் ஆனால் குறிலாகவும் நெடில் ஆனால் நெடிலாகவும் வர வேண்டும்.


உ - ம்:

பட்டு - கட்டு,

பழகு - அழகு,

அலைகள் - கலைகள்.

பாண்டவர் - ஆண்டவர்,

தேடினேன் - பாடினேன்,

ஆளும் - நாளும்


போன்றவை ஒன்றுக்கொன்று எதுகையாகும்.


பண்டு - பாண்டு,

ஆடவர் - படகு போன்றவை எதுகை ஆகா.


எதுகையில் முதலெழுத்து குறில் என்றால் குறிலாகவும், நெடில் என்றால் நெடிலாகவும் வர வேண்டும். நினைவில் கொள்ளுங்கள்.


இரண்டாவது எழுத்து ஒன்றினாலும் குறில் நெடில் மாறினால் அது எதுகை ஆகாது.


எதுகையில் இன்னும் சில #சிறப்பில்லாதஎதுகைகளும்உண்டு.


அவற்றில் மிக முக்கியமானவை மூன்று, அவை,

01. #வருக்க_எதுகை,

02. #இன_எதுகை மற்றும்

03. #ஆசிடைஇட்டஎதுகை ஆகும்.

அவற்றைத் தனிப் பதிவாகப் பதிவு செய்கிறேன்.


02. #மோனைத்_தொடை:

.- - - - - - - - - - - - - - - - - - - - - -

முதல் எழுத்துகள் ஒன்றி வர வேண்டும்.

அ, ஆ, ஐ, ஒள - ஒன்றுக்கொன்றும் மோனையாகும்

இ, ஈ, எ, ஏ, யா - ஒன்றுக்கொன்று மோனையாகும்.

உ, ஊ, ஒ, ஓ - ஒன்றுக்கொன்று மோனையாகும்.

இவற்றோடு புணரும் 18 மெய்யெழுத்துகளும் இந்த விதியின் படியே ஒன்றுக்கொன்று மோனையாகும்.


உ - ம்:

- - - - - -

க, கா, கை, கெள - ஒன்றுக்கொன்று மோனையாகும். மற்ற மெய்யெழுத்துகளுக்கும் இந்த விதியைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.


கி, கீ, கெ, கே - ஒன்றுக்கொன்று மோனையாகும். மற்ற மெய்யெழுத்துகளுக்கும் இந்த விதியைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.


கு, கூ, கொ, கோ - ஒன்றுக்கொன்று மோனையாகும். மற்ற மெய்யெழுத்துகளுக்கும் இந்த விதியைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.


#சிறப்பு_விதி.

ச, த - ஒன்றுக்கொன்று மோனையாகும். 

அவ்வண்ணமே மேற்சொன்ன விதிப் படி ச, த, சா, தா, சை, தை, செள, தெள - ஒன்றுக்கொன்று மோனையாகும். இ - வரிசைகளையும், உ - வரிசைகளையும் அவ்வண்ணமே பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.


ம, வ - ஒன்றுக்கொன்று மோனையாகும். 

அவ்வண்ணமே மேற்சொன்ன விதிப் படி ம, வ, மா, வா, மை, வை, மெள, வெள - ஒன்றுக்கொன்று மோனையாகும். இ - வரிசைகளையும், உ - வரிசைகளையும் அவ்வண்ணமே பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.


ஞ, ந - ஒன்றுக்கொன்று மோனையாகும். 

அவ்வண்ணமே மேற்சொன்ன விதிப் படி ஞ, ந, ஞா, நா, ஞை, நை, ஞெள, நெள - ஒன்றுக்கொன்று மோனையாகும். இ - வரிசைகளையும், உ - வரிசைகளையும் அவ்வண்ணமே பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.


#விகற்பம்என்றால்எதுகையைக்_குறிக்கும்.

ஒரு வெண்பாவில் நான்கு அடிகளிலும் ஒரே எதுகை(விகற்பம்) வந்தால் அஃது ஒரு விகற்ப வெண்பா எனப் படும்.

முதல் இரண்டடிகளுக்கு ஓர் எதுகையும் பின் இரண்டடிகளுக்கு வேறோர் எதுகையும் வந்தால் அஃது இரு விகற்ப வெண்பா ஆகும்.


அடுத்த பதிவில் #சொல்லுக்கும்_சீருக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லி விட்டு எடுத்துக் காட்டு வெண்பாக்களைப் பார்ப்போம்.


Comments

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

16.வெண்பா இலக்கணம்(அகன்)