1.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - மாலைப்பொழுது)

 



1. மாலைப் பொழுது//

மகிழ்வைத் தருகிறது//

பள்ளி முடிந்த நேரம்//


 ---தஞ்சை விஜய்...


2. கடற்கரைக் காற்று //

மிகவும் இனிமையாக இருக்கிறது //

சூடான பட்டாணி சுண்டல்.//


- நாகை. ஹாஜா


3. அலங்காரச் சிலை

ஆசையோடு பார்க்கின்றனர் 

சுண்டல் பிரசாதம் 


வ பரிமளாதேவி


4. இலையுதிர்த்த மரம் 

அதுவும் விழுந்துதான் கிடக்கிறது 

மாலை நேரத்து நிழல் 


    பாண்டிய ராஜ்


5. அந்திமந்தாரை பூ//

அழகாய் இருக்கிறது//

சாயங்கால வானம்//


ஜெய வெங்கட்


6. இதமான காற்று / 

மகிழ்வுடன் புதிய தம்பதியர் / 

கடற்கரை மணலில் ./     


                     கவிகெஜா


7. மாலைப் பொழுது

மேகம் மூடிய கதிரவன்  

மெல்ல இருளை அணைக்கிறது..!!


அனுராதா நாகப்பன்.


8. அஸ்தமிக்கும் சூரியன் 

ரம்மியமாக காட்சி தருகிறது

சந்தியாகால மேகம்


...கவியாசகன்...!!!


9. மாலை நேரக்காற்று//

இதமாய் இருக்கிறது //

தென்றல் //


உடுமலை சே.ரா . முஹமது


10. மாலைப்பொழுது கதிரவனுக்கு 

விடை கொடுத்து காத்திருக்கும் பௌர்ணமி நிலவு/


பெ.அன்பழகன்


11. மாலைப்பொழுது /

மின்னிக் கொண்டிருக்கிறது/

வெள்ளித்தட்டு/


வட்டக்கச்சி வினோத்


12. மாலைப் பொழுது/

மயக்கத்தில் இருக்கும்/

மதுப் பிரியர்


-சாண்டில்யன் விவேகானந்தன்


13. மாலைச் சூரியக்கதிர்கள்/ 

வானத்தின் அழகை அதிகரிக்கின்றன/

வரிசையில் பறவைகள்!!


நாகலெட்சுமி இராஜகோபாலன்


14. மாலைப் பொழுது/

மனதிற்கு இன்பம் தருகிறது/

மஞ்சள் வானம்/


செ.புவிதா


15. மாலைப் பொழுது/

மனதை மயக்குகிறது/

அல்லி மலர்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி,


16. மாலைப் பொழுது //

கூட்டாஞ் சோறு விளையாட்டு //

குழந்தைகள் மகிழ்ச்சி //


தாழை.இரா.உதயநேசன்


17. மாலைப் பொழுது//

மகிழ்வைத் தருகிறது //

குருவிகளின் சத்தம்//


பா.இராமர்


18. இரையோடு குருவி//

கூட்டைத் தேடி வருகிறது//

பசியோடு பாம்பு//


ஐ.துஷ்யந்தன்


19. மாலை நேரம்/

கூட்டை வந்தடைகிறது/

இரைதேடிய பறவை/


நழீம் ஹனீபா


20. உழைத்துக் களைத்து

வீடு வருகிறது

அறுவடை நெல்


பாலன் திரு


21. மாலைப் பொழுது/

மன அமைதி தருகின்றது/

தூங்கும் நேரம்/


அறூபா அஹ்லா


22. மழைநேர மாலையில்/

அழகாய்ப் பிரகாசிக்கிறது/

வானவில்/


ராதாமணி


23. அலங்கார மாலைப்பொழுது/

இருள் சூழக் காத்திருக்கும்/

விலை மகளிர்!


க.ஐயப்பன் 


24. மாலை நேரப் பொழுது/

மனதைக் கவர்கிறது/

தேநீரின் மணம்/


மகேஸ்வரி கிருஷ்ணசாமி


25. மேய்ச்சல் ஆடுகள்//

பட்டியில் எட்டிப் பார்க்கின்றன//

இடையனின் குழலோசை//


~க.குணசேகரன்


26. களைப்பில் கதிரவன்

இல்லம் நோக்கிப் பயணப்படுகிறான்

ஏரோட்டும் விவசாயி 


இராசராசசோழன்


27. மதிய உறக்கம்/

விழித்தெழுந்ததும் மறைந்து போனது/

மாலைப் பொழுது!


மு.இரா.சாமியப்பன்


28. மாலை வேளை 

மனதுக்கு இதமாக இருக்கிறது 

ஆலயமணி ஒலி 


நிர்மலா சிவராசசிங்கம் 

  

29. மாலைப் பொழுது/

இதமாய் இருக்கிறது/

கடலோரக் காற்று!


-சு.கேசவன்


30. வெளிச்சம் மறைய

கண்கள் விழித்துக் கொள்கிறது

கறுப்பு ஆந்தை


பென்ஸ் பி


31. அந்திப் பொழுது /

அழகாகக்   காட்சியளிக்கிறது /

சிவந்த வானம் /


கரவையூர் அ.அகிலன்


32. மாலைப் பொழுதில்/

மக்கள் கூட்டம் பெருக்கெடுக்கின்றனர்/முகநூல் தளத்தில்!


சிங்கை கார்முகிலன்


33. மாலைப்போழுது/

அழகாகத்  தெரிகின்றது/

பறவைக் கூட்டம்/


செ.க.முகமட்ஹுசைன்


34. இருளைப் போர்த்திக் கொள்ளும் பூமி /

கொஞ்சம் விலக்கிப் பார்க்கும் /

இடி மின்னல் /


ரகுமான் நபீர் 


35. மாலைப் பொழுது

மங்கலாகத் தெரிகிறது

தூரத்தில்ப் படகு


முல்லை நிரோயன்


36. மாலைப் பொழுது/

 மனதில் அமைதியைத் தருகிறது/

 இரவின் வருகை/


 பாண்டிச்செல்வி கருப்பசாமி


37. மாலை வேளை /

கூட்டம் அலை மோதுகிறது /

இரவு சந்தை /


ஜெயலெட்சுமி மாணிக்கம்


38. மாலையில் வானம்

மஞ்சள் வண்ணத்தில் இருக்கிறது

மனைவியின் சேலை.


கவிஞர்.மருத்துவர்.

ஜெயக்குமார் பலராமன்.


39. மாலைப்பொழுது

சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது

காடா விளக்கு.


மு.விஜயசாரதி


40. மாலைப் பொழுது/

புத்துணர்வூட்டுகிறது/

மனைவியின் புன்னகை/


|கலாராணி லோகநாதன்


41. கூடு திரும்பும் பறவைகள்/

கறுப்பாகவே தெரிகின்றன/

அந்தியின் நேரத்தில்./


– செல்வா ஆறுமுகம்


42. பகலின் நிறைவு//

இதமாக காட்சி தருகிறது//

மாலைப்பொழுது!!!


மூர்த்தி. டினு


43. செந்நிற வானத்தில்

ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறான்/

ஒற்றைக் கதிரவன்/


எம்.ஜே.எம்.சப்ரி


44. மாலைப் பொழுது//

கூடு திரும்பும் பறவைகள்//

வெகுதொலைவில் சிறகின்றி நான்//


கவிஞர் செல்லம் ரகு


45. வீதியோர மின்விளக்குகள் 

மெதுவாக எரியத் தொடங்குகின்றன

அன்றாடங்காய்ச்சிகளின் அடுப்புகள்.


கிருஷ்ணலதா வசீகரன்


46. அந்திசாயும் வேளை/

இருள்போக்க ஒளியேற்றத் தயார்/

மின்மினிப் பூச்சிகள்...!


செண்பக ஜெகதீசன்...


47. சிறுவர்  விளையாட்டோடு

முடிவுக்கு வருகிறது

மாலை சிற்றுண்டி.


ஷல்மா ஷாஜஹான்


48. அந்தி நேரம்/

கடற்கரையில் குவிந்திடும்/

மீனவர் படகுகள்.


கி.இலட்சுமி


49. சூரியன் மறைந்து செல்ல

கிழக்கில் தோன்றுகிறது ..

உதிக்கும் பௌர்ணமி நிலவு  !/


பொத்துவில்

மீராசாகிபு சமூன்


50. பரிதி பதுங்கும் மாலை

மேய்ச்சல் முடிந்து விரைகின்றன

பசியோடு ஆட்டுக் குட்டிகள்


புதுவைத் தமிழ்நெஞ்சன்


51. மலை முகட்டில்/ 

மெதுவாக மறைகிறது/ 

பேருந்து/


சுகுமார்


52. மாலைப் பொழுது

நிரம்பி வழிகிறது

குருவிக்கூடு


எம் ஷாஹுல் ஹமீது.


53. மாலைப் பொழுதில்/

கிளைக்குத் திரும்பும்/

பறவைகள் கூட்டம்/


உமர்பாரூக்.


54. கடலில் இறங்கும் சூரியன்/

கைகளின் பின்னால் மறைகிறது/

குழந்தையின் கண்கள்.../


ஐ.தர்மசிங்


55. பறவைகள் கூடு திரும்ப

மீண்டும் சலசலப்பாகும்

வேலியோரத்து மரம்


முகம்மது அலவி


56. மறையும் மஞ்சள் கதிர் /

எங்கும் பரவி நுழைகிறது /

கொசுக்கூட்டம் /


மனோகரி ஜெகதீஸ்வரன் 


57. சூரியன் மறைவால்/

வேகமாக பறக்கிறது/

புறாக் கூட்டம்/


கோட்டீஸ்வரி ராமசாமி


58. மாலை நடைப்பயிற்சி/

மனநிறைவைத் தருகிறது/

நண்பனின் உரையாடல்/


           சி.பாக்கியராஜ்


59. கார்கால மாலைப்பொழுது/

குறைந்து கொண்டே வருகிறது/

மக்கள் நடமாட்டம்...!/


மெ. கிஷோர்கான்


60. சூரியன் மறையும் நேரம் /

சிவந்து போய் இருக்கிறது /

கண்களில் தூசு /


ஹரிகுமார் வேலாயுதன், 


61. வானத்தில் கதிரவன்/

கடலில் குதிக்கத் தயாராகிறான்/

கரையில் நிற்கும் சிறுவன்/


தென்கரை தாயுமானவன்


62. மாலை நேரத்தில்

மன அமைதியை தருகிறது

சிவந்த செவ்வானம்....


முனைவர் ஞா விஜயகுமாரி


63. அந்திசாயும் நேரம் 

சிகப்பாக மாறுகிறது 

பூச்சி விழுந்த கண்


- அ.அண்ணாமலை


64. மாலைப் பொழுது//

மனதிற்கு அமைதியைத் தருகிறது//

படகு சவாரி!


-சரவணன்,கோவை


65. மாலைப் பொழுது//

மன நிறைவைத் தருகிறது//

சர்வமத பிரார்த்தனை//


கன்னிமுத்து வெல்லபதியான்


66. தூரத்தில் படகு

பாதி மறைந்த படியே...

விழும் கதிரவன்//


ஜெ.ராபி


67. இறங்கும் பொழுது/

மெல்ல மேலேறி வருகிறது/

வெள்ளை நிலா.


- செ.ஸ்ரீகணேஷ் சூர்யா.


68. அந்திமாலைப் பொழுது/

கண்ணுக்கு விருந்தாகிறது/

சாலையோர ஓவியம்..!


ஜெயச்சந்திரன்.ப


69. மாலை நேரம் /

இரைச்சல் அதிகமாகிறது /

பேருந்து நிலையம் /


சாந்தகுமாாி


70. பள்ளி முடியும் நேரம் /

வீடு நோக்கி வேகமெடுக்கும் /

மகளுக்காய் அப்பாவின் பாதங்கள்!.


     - செ. செல்வமணி செந்தில்.


71. மேய்ச்சல் ஆடுகள்

கத்தியபடி ஒடி வருகின்றன

பால்மறவாக் குட்டிகள்


ஈச்சம்பாடி செல்வராஜி


72. மாலைப்பொழுது/

மழைக்காலத்தில் விரைந்து மறையும்/

இருட்டுக்குள் காகம்.../


   உறையூர் வா.மகேஷ்.


73.மறையும் சூரியன்  /

பூமியை அழகாக்குகிறது/

உதிரும்  பூக்கள்/


க.சிவரஞ்சினி


74.கடற்கரை  நடைப்பயிற்சி/

தொடர்ந்து ஒலிக்கிறது/

வியாபாரியின் கூக்குரல்.


த. கலைவாணி சதீசு


75.புதைகுழி எறும்புகளுக்கு

படையலிட்டுக் கொண்டாடுகிறேன்

அந்தியை ...


எஸ். நாகலிங்கம்

தென்னம்பூவயல்


76.அந்திப் பொழுது/

வானம் கீறும் வெண்ணிலவு/

மலரும் மல்லிகை!


அன்புச்செல்வி சுப்புராஜூ


77.நீந்தும் தவளை /

மெதுவாக மறையும் /

அடிவானில் சூரியன் /


கரு. கிருஷ்ணமூர்த்தி


78.மாலைப் பொழுது/

உலர்ந்து கொண்டிருக்கும்/

உழைப்பாளியின் வியர்வை


ஆத்தூர் சாகுல்


79.வீடு திரும்பும் அப்பாவை

ஓடி வந்து கட்டிக்கொள்ளும்

குழந்தையின் கையில் வீக்கம்.


ஆ.நடராஜன்


80.மாலைப் பொழுது //

மங்கலாகத் தெரிகின்றது //

கண் பார்வை //


ஐயாத்துரை.பிரபு


81.மழைக்கால மாலைப்பொழுது  //

மேற்கில் வானவி மின்னுகிறது //

மீண்டும் இடிமின்னல்  //


கவி நிலா மோகன்

..... தஞ்சாவூர்..........


 82.மாலைக் கதிர்கள் /

மாடியில் இறங்குகின்றன /

புறாக் கூட்டங்கள் //


த.யாசகன்


83.மீனவன் வலைவீசி

அசைத்து விட்டு நிற்கிறான் 

அந்திச் சூரியனை..

  -ரசி குணா


84.வீடு திரும்பும் /

மந்தைவெளி மாடுகள் /

 புழுதியோடு மாலை வெய்யில் ............

கா.ந.கல்யாணசுந்தரம்


85.மெல்லச் சரியும் கதிரவன்/

கூடு திரும்பும் கடைசி கூட்டம்/

பாதி வழியில்./


வே.புகழேந்தி 


86.அஸ்தமிக்கும் சூரியன்

பார்ப்பதற்கு அழகாக உள்ளது

பூவிலமர்ந்த பட்டாம்பூச்சி!


       *ரேணுகா ஸ்டாலின்*


Comments

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மாலைப் பொழுது
    ஏனோ மறைத்தாய் பறவைகள்
    பார்வை மங்கியது

    ....வாசன் சாவி

    ReplyDelete
  4. ஹைக்கூக்களின் தொகுப்பு பிரமிக்க வைக்கிறது!. வாழ்த்துகள் அனைவருக்கும்!.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விருத்தம் எழுதுவது எப்படி (இரா.மீனாட்சிசுந்தரம்)

2.ஹைக்கூ கவிதைகள் (சூழல் - இரவில் உலகம்)

1.எளியமுறை தமிழ் இலக்கணம்