சிறுகதை (பாலைவனச் சோலை) - ரேணுகா ஸ்டாலின்
#பாலைவனச்_சோலை
(#சிறுகதை)
"சஞ்சனா என்னோட கேப் எடுத்துட்டு வா டைம் ஆச்சு".
"இதோ வரேன் சத்யா"
"சீக்கிரம் வாடி கேப் எடுத்துட்டு வர இவ்ளோ நேரமாடி".
வந்துட்டேன் ... வந்துட்டேன் ...
இந்தாங்க.
"சரிடி நான் கிளம்பறேன்.
என்னது கிளம்பறீங்களா, நீங்க இன்னும் சாப்பிடல மறந்து போச்சா".
"சாப்பிட்டுட்டு கிளம்புங்க".
"லேட்டாச்சுடி சரி சரி முறைக்காத எடுத்து வை".
ம்ம்ம் ... அது ...
"சாப்பிட்டேன் போதுமாடி சந்தோசமா".
"சரி முழு ஊரடங்கு நேரத்துல உன் இஷ்டத்துக்கு ஸ்கூட்டிய எடுத்துட்டு அத்தை வீட்டுக்கு போனேன் சித்தி வீட்டுக்கு போனேன்னு சுத்தாத சொல்லிட்டேன்".
"அப்புறமா இன்ஸ்பெக்டர் பொண்டாட்டிங்கற திமிருனு அவ சொல்றா, இவ சொல்றானு புலம்ப கூடாது சரியா எனக் கூறிவிட்டு சென்றான்"
"குட்மார்னிங் சத்யா"
"மார்னிங் சரண்"
"இன்னைக்கு எந்த ஏரியா ரவ்ண்டஸ் போகணும் சத்யா".
"நம்ம நகைக்கடை பஜார் பக்கம் என்று சத்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே".
"ஐயா நாங்க என்னயா செய்வோம் பொழப்பத் தேடி வெளி மாநிலத்துக்குப் போனோம், இது வர நல்லா தான் இருந்தோம்".
இந்தக் கொரோனாவால சோறு தண்ணி இல்லாம புள்ள குட்டியெல்லாம் துடியாத் துடிக்குதுங்கய்யா.
அதனால தான் சொந்த ஊருக்குப் போனாலாவது ஒரு வேலை கஞ்சியாவது குடிக்கலாமேனு விடச்சொல்லி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம் விடலங்கய்யா.
"வேற வழியே இல்லாமதாங்கய்யா என்னோட பொண்டாட்டி மூனு புள்ளையோட நடந்தே வந்திருக்கேன்".
"இங்க எங்கள புடிச்சு வச்சா நாங்க என்னய்யா செய்வோம் என கண்ணீருடன் அவர் கூறிய வலி நிறைந்த வார்த்தைகள் சத்யாவின் காதில் விழுந்தது".
"சரண் நீ ரவ்ண்ட்ஸ் கிளம்பு
நான் இதோ வரேன் என்ற சத்யா" அவர்களின் அருகில் சென்று அவர்கள் நிலையினைக் கேட்டு அறிந்து கொண்டு ஏட்டு சுவாமிநாதனிடம் இவங்கள நம்ம வண்டியிலயே எந்தப் பிரச்சனையும் இல்லாம அனுப்பி விடுங்க அவங்க ஊருக்குள் நுழையும் போது கொரோனா பரிசோதனை பண்ணிப்பாங்க என்றான்.
ஐயாஆஆஆஆ .... என்று இழுத்தான் ஏட்டு சுவாமிநாதன்.
"என்னய்யா இழுக்கற இல்லங்கையா அவங்க ஊரில் அதிகமாக கொரோனா பாதிப்பு இருப்பதால் யாரும் ஒரு மாதத்துக்கு ஊருக்குள்ள போகவும் முடியாது வெளிய வரவும் முடியாது" என்றார் ஏட்டு சுவாமிநாதன்.
ஓ... அப்படியா என்று முகவாயை தடவிக் கொண்டே சரி நீங்க என் கூட வாங்க என்று அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
சஞ்சனா சஞ்சனா என அழைத்துக் கொண்டே சத்யா காலிங்பெல்லை அழுத்த,
இவருக்கு வேற வேலையே இல்ல எப்பப்பாரு ட்யூட்டி நேரத்துல உன் நெனப்பு வந்துச்சு செல்லம் வீட்டிக்கு கிளம்பி வந்துட்டேன்னு பெனாத்துவாரு என முணுமுணுத்துக் கொண்டே வந்தவள்.
சத்யாவுடன் வந்திருந்த அவர்களைப் பார்த்ததும், யார் இவர்கள் எனும் கேள்விகளுடன் ஏதும் புரியாதவளாய் சத்யாவை ஏறிட்டாள்.
அவர்களின் நிலை பற்றி சத்யா விளக்கிக் கூறியதும், சஞ்சனாவிற்கு மனம் ஏதோ போலாயிற்று.
சத்யா ஒரு நிமிசம் எனக் கூறிவிட்டு அவர்களை அழைத்துச் சென்று உணவு பரிமாறி சாப்பிட சொல்லிவிட்டு,
சத்யாவிடம் வந்து இதுக்கு ஒரு சொல்யூசன் இருக்கு சத்யா நான் சொல்லவா என்றாள்.
சொல்லு சஞ்சனா என்ன சொல்யூசன் என்றவனிடம் பார்த்தா நல்லவங்களா தான் தெரியறாங்க அதனால,
இவங்களுக்கு நம்ம மளிகைக்கடைல ஒரு வேலை போட்டு தந்துட்டு நம்ம சாரதாக்கா காலி பண்ண வீடு சும்மா தானே இருக்கு அதுல இவங்கள தங்க வச்சா என்ன என்றாள்.
அடியே என் அருமை பொண்டாட்டி செம்ம யோசனைடி இதுதான்டி என் செல்லக்குட்டி சஞ்சனா என கூறிக் கொண்டே கட்டியணைக்க வந்தவனை கண்களாலேயே அடக்கினாள்.
அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், சத்யா சொல்லுங்க என்றாள்.
அவர்களிடமும் சஞ்சனா கூறிய யோசனையைச் சொல்லி உங்க ஊர் நிலைமை சரியானதும் நாங்களே பொறுப்பா அனுப்பி வைக்கிறோம் எனக் கூறி விட்டு ஸ்டேசன் சென்றான்.
ஏனோ தானோவென்று இல்லாமல் நன்றியோடு நன்முறையில் கடையைப் பார்த்துக் கொண்டார் சரவணன், அவரது மனைவி சரசுவும் சஞ்சனாவின் வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தார்.
ஒரு மாதகாலமும் ஊரடங்கிலும் கவலைகள் கண்ணீர் மறந்து உல்லாசமாகவே உருண்டோடியது சரவணன்-சரசு தம்பதியர்க்கு.
சத்யா-சஞ்சனாவிற்கும் அவர்களின் மேல் நல்லெண்ணம் , நம்பிக்கை பேலோங்கியே இருந்தது.
அதனாலேயே அவர்களை அனுப்ப மனமின்றி சத்யா ஊருக்கு போக கிளம்பும்படி அவர்களிடம் கூற, ஐயா நாங்க வேலை செய்றது உங்களுக்கு பிடிச்சிருந்தா நாங்க இங்கயே வேலை பார்க்கிறோம் என சரவணன் கேட்டது தான் தாமதம்.
அட நானே கேட்க தயங்கிட்டு தான் ஊருக்கு கிளம்ப சொன்னேன். உங்களோட நாணயம், நன்னடத்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சரவணன் நீங்க தாராளமா இங்கயே இருங்க என்று சிரித்துக் கொண்டே கூறிவிட்டு பணிக்குச் சென்றான்.
கடவுளின் அருளாலும் இன்ஸ்பெக்டர் சத்யா-சஞ்சனாவின் நல்மனதாலும் பாலைவனமான சரவணன்-சரசு தம்பதியரின் வாழ்வு மகிழ் மணம் பரப்பும் சோலைவனமாய் ஆனது.
சத்யா போன்ற மனிதம் நிறை மனம் கொண்ட காவல் அதிகாரிகளைப் பார்க்கும் போது காக்கிச்சட்டையின் கண்ணியத்திற்கும், நேர்மைக்கும் ஒரு சல்யூட் அடிக்க தோணுதுல, எதுக்கு யோசனை சல்யூட் இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் கொரோனா காலத்தில் எவ்வளவோ இடையூருக்கிடையே நேர்மையோடும், மனிதத்தோடும் கடைமையாற்றும் காவலர்கள் அனைவருக்கும் என சொல்லிக்கலாமே.
முற்றும்.
ரேணுகா ஸ்டாலின்

Comments
Post a Comment